Author: Site Admin

டாடா குழுமத்தை உலகளாவிய அளவில் ஒரு சிறந்த நிறுவனமாக மாற்றிய தொலைநோக்கு தலைவரான ரத்தன் டாடாவின் மறைவால் உலகம் உண்மையிலேயே ஒரு மாமனிதரை இழந்துவிட்டது. 86 வயதில், அவர் ஒருமைப்பாடு, இரக்கம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார். ரத்தன் டாடா வெறும் தொழிலதிபராக மட்டுமல்லாமல், பலருக்கும் சிறந்த வழிகாட்டியாகவும், உத்வேகமாகவும், இரக்க குணமுள்ளவராகவும் தான் அதிகம் அடையாளம் காணப்படுகிறார். தொழில் மற்றும் சமூகத்திற்கான அவரது பங்களிப்புகள் தேசத்தில் ஒரு மனிதன் எவ்வளவு செய்ய முடியும் என்பதை மக்களுக்கு எப்போதும் நினைவூட்டும். ரத்தன் டாடாவின் குறிப்பிடத்தக்க பயணத்தை நாம் சிந்திக்கும்போது, அவரது நினைவகத்தையும் அவர் நம் அனைவரிடமும் விதைத்த நல்ல சிந்தனைகளையும் மதிக்கிறோம். அவரை விரும்புகிறவர்களின் இதயங்களில் அவருடைய ஆன்மா எப்போதும் வாழும். இந்த உலகம் என்றென்றும் உங்களை நினைவுக்கூறும். RIP மிஸ்டர் டாடா. The world mourns the…

Read More

கேரளாவில் பிரசித்திப்பெற்ற வழிபாட்டு தளமாக இருக்கிறது சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட இந்தியாவில் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பகதர்கள் ஒவ்வொரு ஆண்டும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, சபரிமலையில் மண்டல – மகரவிளக்கு காலத்தில் தரிசனம் செய்ய போகும் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்த 80,000 பக்தர்கள் மட்டுமே தினமும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜய் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கார்த்திகை மாதத்தில் வரும் மண்டலகால பூஜை, மகரவிளக்கு பூஜைகளுக்கு ஐயப்ப சாமி பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் கடைப்பிடித்து வருடா வருடம் கோவிலுக்கு சென்று வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் சாமி கோவிலில் மண்டலகால பூஜைகள்…

Read More

ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணியில் இந்தியாவும் இறங்கியுள்ளது. சென்னையில் ஐசிஎப் தொழிற்சாலையில், ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் ரயில் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே 35 ஹெரிடேஜ் ரயில்களை உருவாக்கும். ஒவ்வொரு ரயிலும் ரூ.80 கோடி செலவில் தயாரிக்கப்படும். மேலும் மலைப் பகுதிகளில் ஹைட்ரஜன் ரயிலை இயக்குவதற்கான கட்டமைப்பை உருவாக்க ரூ.70 கோடி செலவிடப்படும். வடக்கு ரயில்வேயின் ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் இந்த ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹரியானாவின் ஜிந்த் நகரில் அமைக்கப்பட்டுள்ள 1 மெகாவாட் பாலிமர் எலக்ட்ரேலைட் மெம்பரேன் எலக்ட்ரோலைசர் ரயிலுக்கு தேவையான ஹைட்ரஜனை வழங்கும். இந்த எரிபொருள் நிரப்பும் மையத்தில் 3,000 கிலோ ஹைட்ரஜனை சேமித்து வைக்க முடியும். இங்குள்ள ஹைட்ரஜன் கம்ப்ரஸர் மற்றும் டிஸ்பென்சர்கள் மூலம் ரயிலில் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹைட்ரஜன்…

Read More

காஞ்சிபுரத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் ஒன்றாக இருப்பது சாம்சங் தொழிற்சாலை இங்கு 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் சிஐடியு சங்கம் துவங்கப்பட்டது, ஆனால் அந்த சங்கம் துவங்கப்பட்டதற்கான அறிமுக கடிதத்தை சாம்சங் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் எந்த ஒரு பதிலும் வரவில்லை. மேலும் சாம்சங் தொழிற்சாலையில் ஏசி, பிரிட்ஜ், மற்றும் வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை. சாம்சங் நிறுவனம் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது, சம்பளம் வழங்கப்படாது, தீபாவளி போனஸ் கிடையாது என பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்து வரும் நிலையிலும் பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் காஞ்சிபுரம் தேரடி பகுதியில் இருந்து சாம்சங் தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர்…

Read More

பெண் தொழில்முனைவோராக திகழ்பவர் டாக்டர் வித்யா வினோத். பலவித போராட்டங்களுக்கு பிறகு ‘Study world’ என்ற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சாதிக்க துடிக்கும் பெண்கள் பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார் வித்யா வினோத். பெண் தொழில்முனைவோரான இவர், வெற்றி பெற போராடும் பெண்களுக்கு சில அறிவுரைகள் கூறியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொலைநோக்கு பெண் தொழில்முனைவோர் டாக்டர் வித்யா வினோத், உறுதியுடன், எவரும் தங்கள் கனவுகளை அடைய முடியும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணம். கேரளா மாநிலம் கண்ணூரில் பிறந்த இவர், தமிழ்நாட்டில் தனது கல்வியை முடித்துவிட்டு துபாயில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். 50,000 திர்ஹாம் கடனுடன், துபாயில் ஒரு பயிற்சி மையத்தைத் தொடங்கினார். இது இறுதியில் முன்னணிகல்வி நிறுவனம் ‘Study world’ ஆக வளர்ந்தது. 2005 ஆம் ஆண்டில், துபாயில் ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை நிறுவுவதில் வித்யா முக்கிய பங்கு வகித்தார். இன்று, Studyworld கல்வி உலகம் முழுவதும் 25,000…

Read More

வங்கிக் கடன் பெற விரும்பும் இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு தங்கம் மிகுந்த பயனுள்ள ஒன்றாக இருப்பதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சென்னையில் தங்கத்தை அடமானமாக வைத்து பெரும்பாலான பெண்கள் கடன் பெறுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலான சுயதொழில் செய்யும் பெண்கள் கடன்களை விட தனிப்பட்ட சேமிப்பை விரும்புகிறார்கள். நாட்டிலுள்ள பெண் கடைக்காரர்களுக்கு ‘ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறை’ மத்தியில் தங்கம் மிகவும் பிரபலமான பொருட்களில் ஒன்றாக உள்ளது. இருப்பினும், அவசர காலங்களில் நிதி திரட்டும் போது இது பெண்களுக்கு கை கொடுக்கிறது. அதிகமான இந்தியப் பெண்கள் தங்கள் தொழிலைத் தொடங்க விரும்புவதால், தங்கம் முக்கியமான ஆவணமாக உருவெடுத்துள்ளது. ‘பெண்கள் மற்றும் நிதி’ என்ற புதிய கணக்கெடுப்பு இதனை தெரிவித்துள்ளது. CRISIL மற்றும் DBS பேங்க் இந்தியா நடத்திய ஆய்வில், பெண் தொழில்முனைவோர் கடனைத் தேர்ந்தெடுக்கும்போது தங்கம் மற்றும் சொத்து ஆகியவை மிகவும் விருப்பமான அடமான விருப்பங்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இந்த…

Read More

திரைப்படத் துறையில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களின் சம்பளம் தொடர்பான செய்திகளால் அடிக்கடி தலைப்பு நியூஸில் இடம் பிடிக்கின்றனர்.. ஷாருக்கான், சல்மான் கான், அமிதாப் பச்சன், அமீர் கான், அக்‌ஷய் குமார் மற்றும் பலர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். முன்னதாக திரையுலகில் பாலிவுட் நடிகர்கள் அதிக சம்பளம் வாங்கி வந்தனர். தற்போது தென்னிந்திய நடிகர்களும் அவர்களுக்கு சமமாக சம்பளம் பெற ஆரம்பித்து விட்டனர். அப்படிப்பட்ட ஒரு நடிகரைப் பற்றி பேசுகையில், எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பல படங்களில் அவர் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சயின்ஸ் பிக்சன் படம் ரூ 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. அவர் யாருமல்ல பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் தான். பிரபாஸ் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் அவரின் சம்பளம் அதிகரித்து கொண்டே செல்கிறது. படத்தின் பட்ஜெட் மற்றும் பிற விஷயங்களை பொறுத்து அவரின்…

Read More

தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ் தனது புதிய ஆலையை தொடங்கியுள்ளது. டாடா வாகனங்கள் மட்டுமின்றி அடுத்த தலைமுறை ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களும் இந்த ஆலையில் தயாரிக்கப்படும். இந்த கார்கள் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலையின் தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாடா சன்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் என்.சந்திரசேகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பணப்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலை மூலமாக சுமார் 5,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலை திறப்பு விழாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் என்.சந்திரசேகரன் பேசும் போது, ஆலையில் தயாரிக்கப்படும் கார்கள், இந்திய சந்தைக்கு மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தைகளையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படும். இந்த ஆலை சொகுசு மற்றும் மின்சார வாகனங்களையும் உற்பத்தி செய்யும். டாடா சன்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் தலைவர்…

Read More

திருப்பதி லட்டு குறித்து பேசிய தனது சகோதரர் கார்த்தி சார்பில் சூர்யா மன்னிப்பு கேட்டதாக ஒரு ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இணையத்தில் பரவி வரும் இந்த தகவல் முற்றிலும் தவறானது. இந்த விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை. இந்த சந்தேகத்தை கிளப்பிய ட்வீட் போலி கணக்கில் இருந்து பதிவிடப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. சூர்யாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், லட்டு சர்ச்சையைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. விரைவில் வெளியாகவுள்ள தனது தம்பி கார்த்தியின் ‘மெய்யழகன்’ படத்தின் டிரெய்லரை கடைசியாக கடந்த திங்கட்கிழமை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் சூர்யா. சமீபத்தில் ‘மெய்யழகன்’ படத்தின் புரமோஷனுக்காக ஆந்திராவுக்கு சென்றிருந்த நடிகர் கார்த்தியிடம் திடீரென லட்டு பற்றி கேள்வி எழுப்பபட்டதும், அது மிகவும் சென்சிடிவான விஷயம் லட்டு பற்றி பேச மாட்டேன் என பதிலளித்தார். இதனையடுத்து பவன் கல்யாண் லட்டு பற்றி யாரும் வேடிக்கையாக கூட பேசக் கூடாது என கார்த்தியின்…

Read More

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் அறிக்கையின் படி உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் என பல பெயர் இடம்பெறுவது வழக்கம். ஆனால் ஃபோர்ப்ஸின் பட்டியல் துல்லியமானதா என்று யாரும் யோசித்தது இல்லை. ரத்தன் டாடாவைப் பற்றி படிக்கும் போது உலக பணக்காரர்கள் தொடர்பான அறிக்கை குறித்த பலரின் பார்வையை மாற்றும். இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டில் lIFL Wealth Hurun India Rich Listil ரத்தன் டாடா வின் சொத்து மதிப்பு 3,500 கோடியாக இருந்தது. தரவரிசை பட்டியலில் 433வது இடத்தில் இருந்தது. 2022 ஆம் ஆண்டில் 3,800 கோடி நிகர மதிப்புடன் 421 வது இடத்தில் தரவரிசையில் உயர்ந்தது. அவரது முதன்மையான வருமான ஆதாரம் டாடா சன்ஸ் மற்றும் அவரது கீழ் தரவரிசைக்கு முக்கிய பங்களிக்கும் காரணி. டாடா…

Read More