பாலிவுட் ஜாம்பவான்களான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனின் பேத்தி தான் நவ்யா நந்தா. தனது குடும்பத்தினரை போல் சினிமாவில் இல்லாமல் தொழில் துறையில் சாதித்து வருகிறார் நவ்யா. அத்துடன் சமூக சேவகராகவும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். 21 வயதிற்குள்ளாகவே தொழில் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தார். சமீபத்தில் புகழ்பெற்ற இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM) அகமதாபாத்தில் மேலாண்மையில் முதுகலைப் படிப்பைப் படிக்க சேர்ந்தார் நவ்யா.
தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த புதிய விஷயங்களை பின்தொடர்பவர்களுக்கு தெரிவித்து வருகிறார். யு.எஸ். ஃபோர்டாம் பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் யுஎக்ஸ் டிசைனில் பட்டம் பெற்ற நவ்யா, ப்ராஜெக்ட் நவேலி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். இது இளம் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக சுதந்திரத்தை அடைவதற்காக வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது.
நவ்யாவின் தந்தை நிகில் நந்தா, முன்னணி இந்திய பொறியியல் நிறுவனமான எஸ்கார்ட்ஸ் குபோடா லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இந்நிறுவனம் 2021ஆம் ஆண்டு நிலவரப்படி ரூ.7014 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. எஸ்கார்ட்ஸ் குபோடா விவசாய இயந்திரங்கள், கட்டுமானம் மற்றும் ரயில்வே உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் நிறுவனமாகும்.
இந்நிறுவனத்தில் 36.59 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிகில் நந்தாவின் ஆண்டு சம்பளம் ரூ.13.1 கோடி. 21 வயதில் ஜூனியர் மார்க்கெட்டிங் மேலாளராக குடும்பத் தொழிலில் சேர்ந்த நவ்யா, அதே நிறுவனத்தின் பல்வேறு பதவிகளை பெற்று பணிபுரிந்தார்.
நவ்யா நந்தாவின் தொழில் முனைவோர் மனப்பான்மை அவரது குடும்பத் தொழிலைத் தாண்டியது. நவ்யா ஆரா ஹெல்த் என்ற பெண்களை மையமாகக் கொண்ட சுகாதார தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் உள்ளார். கல்வி, நிதி சுதந்திரம் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பது தான் இந்நிறுவனத்தின் நோக்கம். மேலும், பாலின சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட இலாப நோக்கற்ற நிறுவனமான Project Naveli இன் நிறுவனராகவும் உள்ளார்.
கடந்த 2023 நவம்பரில் அமிதாப் மற்றும் ஜெயா பச்சன் ரூ.50 கோடி மதிப்புள்ள தங்களுடைய சொகுசு ஜூஹு மாளிகையை நவ்யாவின் தாயார் ஸ்வேதா பச்சனிடம் ஒப்படைத்தனர். அதன் வாரிசுகள் நவ்யா மற்றும் அவரது சகோதரர் அகஸ்திய நந்தா ஆகியோர். இது தவிர, நவ்யா தனது தந்தை நிகில் நந்தாவிடமிருந்து டெல்லி மற்றும் பிற நகரங்களில் உள்ள பல சொத்துக்களைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நவ்யா நந்தாவின் தனிப்பட்ட நிகர சொத்து மதிப்பு ரூ.16.58 கோடி என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Discover the luxurious lifestyle and impressive net worth of Navya Nanda, the 26-year-old heiress to a ₹7014 crore conglomerate. From her contributions to business and social causes to her opulent properties and entrepreneurial ventures, explore how Navya Nanda stands out in the world of wealth and influence.