Author: Site Admin
நோயல் டாடா தலைமையிலான டாடா குழுமம் ஜுடியோ பியூட்டி என்ற புதிய பிராண்டை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் இந்தியாவின் வெகுஜன-சந்தையான அழகு துறையில் நுழைகிறது டாடா குழுமம். தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹிந்துஸ்தான் யூனிலீவரின் எல்லே18, சுகர் காஸ்மெட்டிக்ஸ், ஹெல்த் & க்ளோ, மற்றும் கலர்பார் போன்ற பிராண்டுகளுடன் போட்டியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ரிலையன்ஸ், நைக்கா மற்றும் ஷாப்பர்ஸ் ஸ்டாப் போன்ற முக்கிய போட்டியாளர்களிடமிருந்து ஜுடியோ பியூட்டி தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது, இது முக்கியமாக பிரீமியம் மற்றும் சொகுசு பிரிவுகளில் கவனம் செலுத்துகிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ப அழகுப் பொருட்களை விற்பனை செய்வதை நோக்கமாக கொண்டு, ஜுடியோ பியூட்டி தனது முதல் கடையை பெங்களூருவில் திறந்தது. குருகிராம், புனே மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் இதனை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. டாடா குழுமம் அழகு துறையில் ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்தியாவின் முதல் அழகு பிராண்டான Lakme -யை…
நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் விக்கிரவாண்டியில் இக்கட்சியின் முதல் மாநாடு நடந்தது. மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை கொள்கைகளாக கொண்டு தனது கட்சி செயல்படும் என அறிவித்துள்ளார் விஜய். தமிழ் அரசியலில் ஒரு புதிய சவால் தவெகவின் முதல் மாநாடு: விஜய்யின் முதல் மாநாடு அவரது கட்சின் கொள்கை குறித்து அறிவித்துள்ளது. இதன் மூலமாக 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக அனைத்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் என்பது உறுதியாகியுள்ளது. வரலாற்று சூழல்: தமிழ்நாட்டில் தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக ஆட்சியை பிடித்து வருகின்றனர். இந்த இரு பெரும் கட்சிகளுக்கும் கணிசமான வாக்கு வங்கி இங்கு உள்ளது. இந்நிலையில் விஜய்யின் அரசியல் நுழைவு இதில் என்ன மாதிரியான மாற்றத்தை கொண்டு வரும் வரவிருக்கும் தேர்தலில் தான் தெரியும். நட்சத்திர அந்தஸ்து: எம்ஜிஆர் மற்றும்…
அசோக் லேலண்ட் சென்னை எம்டிசியில் இருந்து 500 எலக்ட்ரிக் பேருந்துகளை பெரிய அளவில் ஆர்டர் செய்ததால், பங்குகள் மீதான முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இன்று பங்குகள் சுமார் 2% மேலாக உயர்ந்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனம், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகத்திடம் இருந்து 500 மின்சார பேருந்துகளுக்கான ஆர்டரைப் பெற்றுள்ளது. அதில் 400 பேருந்துகள் ஏசி இல்லாத பேருந்துகளாகவும், 100 பேருந்துகள் ஏசி ஆகவும் இருக்கும். நாட்டின் முன்னணி கனரக வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் 500 எலக்ட்ரிக் பஸ்களை ஆர்டர்களை சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகத்திலிருந்து (MTC) பெற்றுள்ளதாக நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன் எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவான OHM குளோபல் மொபிலிட்டி 500 12 மீட்டர் அல்ட்ரா லோ ஃப்ளோர் (மிக குறைந்த தாழ்தளம்) எலக்ட்ரிக் பேருந்துகளுக்கான ஆர்டர் இதில் அடங்கும். இது தவிர, நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டி, OHM…
இந்தியத் திரையுலகில் முக்கிய நபராக திகழ்பவர் கரண் ஜோஹர். சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸின் 50% பங்குகளை இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஓவான பில்லியனர் ஆதார் பூனவல்லாவுக்கு விற்று தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். 1976 ஆம் ஆண்டில் கரணின் தந்தை யாஷ் ஜோஹரால் நிறுவப்பட்ட, தர்மா புரொடக்ஷன்ஸ் கல் ஹோ நா ஹோ மற்றும் குச் குச் ஹோதா ஹை உட்பட பல சின்னத்திரை படங்களை தயாரித்துள்ளது. 2024 ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலின் படி, கரண் ஜோஹரின் நிகர சொத்து மதிப்பு ரூ.1,400 கோடி என கூறப்படுகிறது. சினிமாவில், கரண் தனது முதலீடுகளை விளம்பரம், நிகழ்ச்சி மற்றும் ஃபேஷன் உள்ளிட்ட பல துறைகளிலும் விரிவுபடுத்தியுள்ளார். அவர் முதலீடு செய்த பிராண்டுகள் மற்றும் நிறுவனங்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம். கரண் ஜோஹருக்கு சொந்தமான பிராண்டுகள் கடந்த 2004 ஆம் ஆண்டு தந்தையின் மறைவுக்கு பின் கரண் கைவசம் தர்மா…
இந்தியாவில் மிகப்பெரிய ஜுவல்லரி நிறுவனமாக திகழும் கல்யாண் ஜுவல்லர்ஸின் நிறுவனர் கல்யாணராமனின் தாத்தா டி.எஸ். கோவில் அர்ச்சகர். தந்தை துணிக்கடை நடத்தி வந்தவர். இப்படி எளிமையான பின்னணியில் இருந்து வந்து ரூ. 75,000 கோடி மதிப்பிலான தொழிலைக் கட்டியுள்ளார் கல்யாணராமன். கல்யாண் ஜூவல்லர்ஸ் இப்போது இந்தியா முழுவதும் 250 ஷோரூம்களையும் UAE, கத்தார், குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் 30 ஷோரூம்களையும் கொண்டுள்ளது. கல்யாணராமனின் தொழில் பயணம் 1993 ஆம் ஆண்டில் கேரளாவின் திருச்சூரில் ஒரு சிறிய தெருவில் முதல் கல்யாண் ஜூவல்லர்ஸ் ஷோரூமைத் திறந்தபோது துவங்கியது. தாத்தாவின் எதிர்ப்பையும் மீறி நகைத் துறையில் தனக்கான பாதையை உருவாக்க விரும்பினார் கல்யாணராமன். ஸ்ரீ கேரள வர்மா கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்று, 12 வயதிலிருந்தே தனது தந்தைக்கு குடும்பத் தொழிலில் உதவிய கல்யாணராமன் நகைக்கடை வியாபரத்தில் இறங்க முடிவு செய்தார். திருச்சூரில் வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் விருப்பங்களை நிறைவு செய்யும்…
2025 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் 1,00,000 மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நகர்ப்புற போக்குவரத்தை மாற்றும் நோக்கில் பாரத் நகர்ப்புற மெகாபஸ் மிஷன் என்ற மாபெரும் முயற்சியை தொடங்குவதற்கு இந்திய அரசாங்கம் தயாராகி வருகிறது. ரூ. 1.75 லட்சம் கோடி பட்ஜெட்டில் இந்த லட்சிய திட்டம் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல், மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் நிலையான நகர்ப்புற இயக்கத்தை மேம்படுத்துதல் போன்ற இந்தியாவின் பரந்த முயற்சியின் ஒரு பகுதி. பாரத் நகர்ப்புற மெகாபஸ் மிஷன் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்களைக் கொண்ட அனைத்து நகரங்களையும் உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மின்சார பேருந்துகளின் ஒருங்கிணைப்பு மற்றும் உள்கட்டமைப்பை ஆதரிக்கிறது. இதில் பேருந்து நிறுத்தங்கள், டெர்மினல்கள் மற்றும் டிப்போக்கள் ஆகியவை சுமூகமான செயல்பாடுகளை எளிதாக்கும். இந்த பணியானது 5,000 கிலோமீட்டர் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஏற்ற தெருக்களை உருவாக்கும், இது மோட்டார் பொருத்தப்படாத பயண வடிவங்களை நோக்கி…
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி ஆகியோர் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர். இந்த ஜோடி சமீபத்தில் தங்களின் நான்கு மாத பேரன் ஏகாக்ர ரோஹன் மூர்த்திக்கு சுமார் ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிசாக அளித்து, அவரை இந்தியாவின் இளைய கோடீஸ்வரர்களில் ஒருவராக ஆக்கியுள்ளனர். இதன் மூலம், அவர் தற்போது இன்ஃபோசிஸில் 0.04% பங்குகளை வைத்திருக்கிறார், அதாவது 1.5 மில்லியன் பங்குகள். இதனால் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் தனிப்பட்ட பங்கு 0.40% லிருந்து 0.36% ஆக குறைந்துள்ளது. 1981 ஆம் ஆண்டு 250 டாலர் முதலீட்டில் நிறுவப்பட்ட இன்ஃபோசிஸ், இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த பெருநிறுவன நிர்வாகம், புதுமை மற்றும் செல்வத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் தரங்களை அமைத்துள்ளது, தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனை சேவைகளில் உலகளாவிய தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. சமீபத்தில், இன்ஃபோசிஸ் ஒரு பங்கிற்கு ரூ.28…
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற தனி பொதுத்துறை நிறுவனம் இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை உருவாக்குகிறது. மணிக்கு 280 கிலோமீட்டர் வேகத்திலும், மணிக்கு 249 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லக்கூடிய இரண்டு அதிவேக ரயில் பெட்டிகளை வடிவமைத்தல், தயாரித்தல் மற்றும் இயக்குதலுக்காக இந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தியாவின் அதிவேக இரயில் திறன்களில் ஒரு பெரிய முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. இந்தியாவில் முதன்முதலாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட புல்லட் ரயில்களை தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இத்திட்டம். இந்த ரயில் பெட்டிகள் மும்பை மற்றும் அகமதாபாத்தை இணைக்கும் 508 கிமீ அதிவேக ரயில் பாதைக்கு முக்கியமானதாக இருக்கும், முதலில் ஜப்பானிய E5 தொடர் ஷிங்கன்சென் ரயில்களைப் பயன்படுத்த திட்டமிட்டது. அதிக செலவுகள் காரணமாக, இந்திய அரசாங்கம் உள்நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்தி, உள்ளூர் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துகிறது. ரூ.866.87 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம், தலா ரூ.27.86 கோடி மதிப்பிலான எட்டு கார்களைக்…
ஸ்ட்ரீ 2 இன் வெற்றியைத் தொடர்ந்து ராஜ்குமார் ராவ் தற்போது பிரபலமாக உள்ளார். இப்படம் உலகளவில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இதனால் அவரின் நிகர சொத்து மதிப்பை மேலும் உயர்ந்துள்ளது. ஸ்ரீகாந்த் மற்றும் மிஸ்டர் & மிஸஸ் மஹி போன்ற படங்கள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றதன் மூலம் இந்த ஆண்டு ராவுக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. ஸ்ட்ரீ 2 படத்தின் வெற்றி ராஜ்குமாரின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கை போ சே!, பரேலி கி பர்ஃபி, ஒமெர்டா, ஸ்ட்ரீ, தி ஒயிட் டைகர், மற்றும் மோனிகா, ஓ மை டார்லிங் போன்ற படங்களின் வெற்றிகளால் திரையுலகில் தனக்கென முக்கிய யாடத்தை பிடித்துள்ளார் ராஜ்குமார். 2008 இல் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் பட்டம் பெற்ற பிறகு 2010 இல் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். அவரது முதல் படமான லவ் செக்ஸ் அவுர் தோக்கா…
இந்தியா பொறியியல் துறையில் சிறந்த விளங்குவதற்கு சின்ன சான்றாக இங்குள்ள ரயில்வே பாலங்களை சொல்லலாம். அந்தளவிற்கு இந்தியாவின் ரயில்வே பாலங்கள் ஆச்சரியம் அளிப்பவை. நதிகள், மலைகளுக்கு இடையில் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பல பாலங்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் இந்தியாவில் அமைந்துள்ள பிரபலமான ஐந்து ரயில்வே பாலங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் அதிசயங்களில் ஒன்று ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம். ராமேஸ்வரம் தீவை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கிறது இப்பாலம். இந்தியாவில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட முதல் பாலம் என்ற வரலாற்றுச் சிறப்பு பாம்பனுக்கு உள்ளது. பாம்பன் ரயில் பாலம் கட்டுவதற்கான முயற்சிகள் 1870 களில் பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு வர்த்தக இணைப்பை விரிவுபடுத்த முடிவு செய்தபோது தொடங்கியது. இது அதிகாரப்பூர்வமாக 1914 இல் தொடங்கப்பட்டது. சுமார் 2.2 கிமீ வரை நீண்டு, 143 தூண்களுடன்-மும்பையின் பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்புக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான…