Author: Site Admin
UPI அல்லது Unified Payment Interface அமைப்பு இந்திய நிதித்துறையில் ஒரு புரட்சியின் தொடக்கமாக இருந்தது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வலுப்படுத்தும் நோக்கில் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டபோது, UPI இவ்வளவு பிரபலமாகிவிடும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இதேபோல், தற்போது ரிசர்வ் வங்கி புதிய வசதியை வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வந்துள்ளது. யூனிஃபைட் லெண்டிங் இன்டர்ஃபேஸ் என்ற நிகழ்நேர கடன் வழங்கும் திட்டத்தை ஆர்பிஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த அமைப்பு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று அறிவித்திருந்தார். சிறு மற்றும் கிராமப்புற கடன் வாங்குபவர்களை மையமாக வைத்து ரிசர்வ் வங்கி யுஎல்ஐ திட்டத்தை கொண்டு வருகிறது. கடந்த ஆண்டில் சில இடங்களில் மட்டும் இந்த புதிய தொழில்நுட்ப தளம் ஒரு முன்னோடி திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தற்போது நாடு முழுவதும் கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. தற்போது கடன் பெறுவதற்கு பல…
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ரசிகைகள் கூட்டம் அதிகம். இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக திகழும் ஷாருக்கான், ஒரு படத்துக்கு ரூ. 250 கோடி வாங்குகிறார். இந்நிலையில் தான் தினமும் ஒரு வேளை தான் சாப்பிடுவதாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார். அதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் தனது வாழ்க்கை முறை குறித்து மனம் திறந்து பேசிய ஷாருக்கான், இரவு 2 மணிக்கு வீட்டிற்கு வருவேன். தூங்கச் செல்வதற்கு முன்பு ஒர்க் அவுட் செய்வேன். காலை 5 மணிக்கு தூங்கச் செல்வேன். ஷுட்டிங் இருந்தால் காலை 9 அல்லது 10 மணிக்கு எழுவேன். தினமும் ஒரு வேளை சாப்பிடுவேன். intermittent fasting எல்லாம் இல்லை. அது என்னுடைய விருப்பம். அமெரிக்க நடிகர் மார்க் வால்ல்பெர்க் எழுந்தவுடன், நான் தூங்கிவிடுவேன். பிறகு நான் படப்பிடிப்பில் இருந்தால், காலையில் ஒன்பது அல்லது பத்து மணியளவில்…
இந்திய ஆட்டோமொபைல் துறையில் விங்ஸ் EV ஆனது ராபின் என்ற ‘எலக்ட்ரிக் மைக்ரோ காரை’ அறிமுகப்படுத்த உள்ளது. இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்யும் வகையிலான குட்டி எலெக்ட்ரிக் கார் ஒன்றை ‘விங்க் EV’ (Wings EV) என்ற பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. தந்தை மகனால் நிறுவப்பட்டது இந்நிறுவனம். ராபின் (Robin) என்ற பெயர் கொண்ட இந்த நிறுவனத்தின் மைக்ரோ காரானது, கடந்த ஆண்டு ஐரோப்பாவில் நடைபெற்ற மைக்ரோமொபிலிட்டி நிகழ்வில் சிறந்த காருக்கான விருதையும் அங்கீகாரத்தையும் பெற்றது. இந்த குட்டி எலெக்ட்ரிக் காரின் வெளயீட்டுத் தேதியை தற்போது அறிவித்திருக்கிறது விங்க் EV. ராபின் என்ற பெயர் கொண்ட இந்த குட்டி எலெக்ட்ரிக் காரை ஒரு கிராஸ்ஓவர் பைக் என்று கூட நாம் சொல்லலாம். ஏனெனில் அப்படித் தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த மைக்ரோ கார். இந்தக் காரின் முன்பக்க டிரைவர் இருக்கை மட்டுமே இருக்கும். பின்பக்கம் ஒரேயொரு நபர் மற்றும் ஒரு குழந்தை அமருக்கும் அளவிற்கு…
வணிகம் உட்பட எந்தத் துறையிலும் வயது என்பது வெறும் எண் என்பதை நிரூபித்தவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர் மருத்துவ சாம்ராஜ்யத்தில் கொடிக்கட்டி பறக்கும் 90 வயது தொழிலதிபரான டாக்டர். பிரதாப் சி. ரெட்டி. அவர் சொத்து மதிப்பு 26858 கோடிகள். இந்த வயதிலும் தினமும் காலை 10 மணிக்கு வேலையைத் தொடங்கி மாலை 5 மணி வரை வேலை செய்கிறார். பிரதாப் ரெட்டி அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர். 1970 களில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு 1983 இல் நிறுவனத்தை நிறுவினார். சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை முடித்த ரெட்டி, அமெரிக்காவில் இருதய மருத்துவராகப் பயிற்சி பெற்றார். 1970 களில் தனது தந்தையிடமிருந்து பெற்ற கடிதம் ரெட்டியின் வாழ்க்கையை மாற்றியது. 1979 இல் ஒரு நோயாளிக்கு தேவையான அறுவை சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல முடியாத சூழ்நிலையை எதிர்கொண்டவர், இந்தியாவில் இருதய சிகிச்சை மருத்துவமனையை அமைக்க…
இந்தியாவின் மிகப் பெரிய SUV தயாரிப்பாளரான மஹிந்திரா 5 டோர்கள் கொண்ட தார் ராக்ஸ் (Thar Roxx) மாடலை சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்து வைத்துள்ளது. முன்பு தொடக்கநிலை வேரியன்ட்களின் விலைகள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மற்ற வேரியன்ட்களின் விலைகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எத்தனை வேரியன்ட்களாக என்ன விலையில் வெளியாகியிருக்கிறது புதிய தார் ராக்ஸ்? MX1, MX3, AX3L, MX5, AX5L மற்றும் AX7L என 6 வேரியன்ட்களாக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், மேனுவல் டிரான்மிஷன், பெட்ரோல் இன்ஜின், டீசல் இன்ஜின், 2WD மற்றும் 4WD ஆகிய அம்சங்களின் விதவிதமான காம்பினேஷன்களில் 18 ட்ரிம்களாகவும் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு வேரியன்டிலும் என்னென்ன ட்ரிம்கள் இருக்கின்றன, அவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகள் மற்றும் அவற்றின் விலை ஆகியவற்றை தனித்தனியாகப் பார்க்கலாம். தார் ராக்ஸ் அடிப்படையான, குறைவான விலை கொண்ட வேரியன்ட் இந்த MX1 தான். இந்த தொடக்கநிலை வேரியன்டில், LED லைட்டிங், டூயல்-டோன் வெளிப்புற நிறம்,…
நாக சைதன்யாவுக்கும் நடிகை ஷோபிதா துலிபாலாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனா அக்கினேனி வெளியிட்ட இந்த செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த மகிழ்ச்சியான செய்திக்கு மத்தியில், நாகர்ஜுனா குடும்பத்தின் சொத்து மதிப்பு குறித்து தான் ரசிகர்கள் அதிகம் பேசிக் கொண்டிருக்கின்றனர். நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியும் நடிகையுமான சமந்தா விவாகரத்து பெற்று குடும்பத்தை விட்டு வெளியேறிய பிறகு அக்கினேனி குடும்பத்தின் சொத்து மதிப்பில் ரூ.100 கோடி குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டதன் மூலமாக அக்கினேனி குடும்பத்தில் சேர்ந்தார் நடிகை சமந்தா. இந்த திருமணத்திற்குப் பிறகு, அவர்களின் மொத்த சொத்து கணிசமாக உயர்ந்தது மற்றும் சுமார் 100 கோடி இந்த குடும்பத்திற்கு வந்தது. இதனையடுத்து சமந்தாவுடனான விவகாரத்திற்கு பின் அக்கினேனி குடும்பத்தின் சொத்து மதிப்பில் ரூ.100 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அக்கினேனி குடும்பம்…
அமெரிக்க குறுகிய விற்பனையாளரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் சமூக ஊடகங்களில் இரண்டு மூன்று நாட்களில் பேசு பொருளாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஹிண்டன்பர்க் மீண்டும் இந்திய சந்தைகளை குறி வைத்துள்ளது. ஏற்கனவே அதானி குழுமம் மீது குற்றம் சாட்டியிருந்த நிலையில், இம்முறை ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டு, இந்திய சந்தைக் கட்டுப்பாட்டாளரான செபியின் தலைவரான மதாபி பூரி புச்சின் மீது உள்ளது. அதானி நிறுவனத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபிக்கும் அவரது கணவருக்கும் பங்குகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகளை கூறி ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஹிண்டன்பர்க் அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்பது நியூயார்க்கை தளமாகக் கொண்ட நிதி ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்த இயக்கத்தை உருவாக்கியவர் நாதன் ஆண்டர்சன். பெருநிறுவன மோசடிகள், ஊழல் கூட்டணிகள் மற்றும் மோசடிகளை வெளிக்கொண்டு வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். கணக்கியல் முரண்பாடுகள், சிக்கல் மேலாண்மை,…
இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் முந்தைய படமான பீஸ்ட் கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாத இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால், அடுத்த ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி பீஸ்ட்டால் இழந்த பெயரை மீட்டெடுத்தார் நெல்சன். அதிக வசூல் செய்த இந்தியப் படங்களில் ஒன்றாக ஜெயிலர் சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்கவுள்ளது. இதற்காக நெல்சன் திலீப்குமாருடன் மீண்டும் ரஜினிகாந்த் இணைகிறார். இப்படத்திற்காக இயக்குனர் நெல்சனுக்கு ரூ.60 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது உண்மையானால் நெல்சனின் திரை வாழ்க்கையில் அதிக சம்பளம் பெற்ற படமாக ‘ஜெயிலர் 2’ மாறும்.மேலும், ஜெயிலரை போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் கெஸ்ட் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மற்றொரு பாலிவுட் பிரபலம் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.…
கெட்டோசிஸ் என்பது சதீஷ் குமார் சுப்ரமணியன் என்பவரால் சென்னையில் நிறுவப்பட்டதாகும். iKicchn (Intelligent Kitchen), ஒரு ‘முழு தானியங்கி சமையலறை’ அல்லது கிட்டோசிஸ் தலைமையில் பெரிய அளவிலான உணவு தயாரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சமையல் தானியங்கு இயந்திரம். iKicchn என்பது ஒரு ரோபோ சமையல் சாதனம் ஆகும். இதன் மூலமாக ஒரே நேரத்தில் பல உணவுகளை தயாரிக்கலாம். பயனர்கள் உள்ளீடும் பொருட்கள் மற்றும் கட்டளைகளை கொண்டு சமையல் செயல்முறையை இவை தாங்களாகவே செய்கின்றன. இந்த புதுமையான இயந்திரம் மூலமாக 50 முதல் 500 பேருக்கு எங்கு வேண்டுமானாலும் உணவு தயாரிக்க முடியும். இதன் மூலம் உணவுத் தொழிலில் பணியாற்ற ஆட்கள் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. “இந்த iKicchn லாபத்தை மேம்படுத்துவதற்கும் நிலையான தரத்தை உறுதி செய்வதற்கும் செலவு குறைந்த தீர்வை வழங்குகிறது” என்று சதீஷ் குமார் கூறுகிறார். 2005 ஆம் ஆண்டில் தான் சதீஷ் குமார் தனது மனைவியின் சமையலறை பணிச்சுமையை எளிதாக்குவதற்கும்,…
இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலகின் பில்லியனர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டது. இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள ஷிவ் நாடார் பணக்கார தொழிலதிபர் மற்றும் கொடையாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஆவார். இவரின் நிகர சொத்து மதிப்பு $35.6 பில்லியன் அதாபது தோராயமாக ரூ.2,97,990 கோடி. இந்திய அளவில் மிக முக்கியமான ஐடி நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது HCL. இதன் நிறுவனர் ஷிவ் நாடார் என்பதை பலரும் அறிந்து வைத்திருப்பர். இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். 1945 ஜூலை 14ஆம் தேதி பிறந்தவர். இவரது பெற்றோர் பெயர் சிவசுப்பிரமணிய நாடார், வாமசுந்தரி தேவி. மதுரை பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் படித்தார். இந்நிலையில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டிய ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து 1976ஆம் ஆண்டு டெல்லியில் இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL) என்ற நிறுவனத்தை ஷிவ் நாடார் தொடங்கினார். இவருடன்…