Author: Site Admin
இந்திய சினிமாவில் சிறந்த நட்சத்திர நடிகர் மற்றும் நடன கலைஞர் பிரிவில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 1978ஆம் ஆண்டு செப்டம்பர் 22ல் வெளியான ‘பிராணம் கரீது’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் சிரஞ்சீவி. இவர் கருப்பு வெள்ளை படக் காலத்தில் தொடங்கி இன்றளவும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்போது ‘விஸ்வம்பரா’ என்ற தலைப்பில் தனது 156வது படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி அறிமுகமான அதே தேதியில் அவருக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் கடந்த 22 ஆம் தேதி நடந்த கின்னஸ் உலக சாதனை விருது நிகழ்ச்சியில், 45 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் பயணித்து 156 படங்களில் நடித்து 537 பாடல்களுக்கு 24 ஆயிரம் வித்தியாசமான நடன அசைவுகளை ஆடியிருப்பதாக அவரை கெளரவித்து இந்த கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.…
எலெக்ட்ரிக் கார் பிரியர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் விதமாக புதிய மின்சார வாகனத்தை எம்ஜி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. வின்ட்சர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் ரூ.9.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையில் புதிய விண்ட்சர் EV-யை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது எம்ஜி மோட்டார். JSW நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த பிறகு அந்நிறுவனம் வெளியிடும் முதல் கார் இது. ஏற்கனவே இந்தியாவில் ZS EV மற்றும் காமெட் EV ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். அந்த கார்களைத் தொடர்ந்து, இந்தியாவில் மூன்றாவது எலெக்ட்ரிக் காராக இந்த விண்ட்சர் EV-யை வெளியிட்டிருக்கிறது எம்ஜி. சேவை அடிப்படையில் பேட்டரி வசதி: புதிய விண்ட்சர் EV-யில் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் பேட்டரியை வாடகை அடிப்படையில் பயனாளர்களுக்காக வழங்கும் முறையில் இந்த விண்ட்சர் EV-யை வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது எம்ஜி மோட்டார். அதாவது, பேட்டரி நமக்கு சொந்தமாக இல்லை. பதிலாக, கிமீ அடிப்படையில் பயன்பாட்டிற்கு ஏற்ப அந்த பேட்டரிக்கு நாம் கட்டணம்…
தேசிய தலைநகரின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்கிறார். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து, தற்போது கல்வி அமைச்சராக பதவி வகித்து வரும் அதிஷி, முதல்வராக பதவியேற்கவுள்ளார். 2013-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் அதிஷி சேர்ந்த சமயமே கட்சியின் கொள்கை திட்ட உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா கைதானப்பின், டெல்லியில் ஆம் ஆத்மியின் முக்கிய முகமாக இருந்தவர் இவர் தான். இவர் 2023-ல் தான் டெல்லி கல்வி அமைச்சராக பதவியேற்று இருந்தாலும், அதிஷி 2015 முதல் 2018 வரை சிசோடியாவுக்கு கல்வித்துறை சம்மந்தமான ஆலோசகராக இருந்திருக்கிறார். தற்போது இவர் கல்வித்துறை மட்டுமல்லாது பொதுப்பணித்துறை, கலாச்சாரம், சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் தற்போது முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித் ஆகியோருக்குப் பிறகு, டெல்லியை வழிநடத்த போகும் பெண்மணி என்ற பெருமை…
மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான கைனெடிக் கிரீன், வேகமாக வளர்ந்து வரும் மின்சார மோட்டார் சைக்கிள் பிரிவில் புதிய ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் குடும்ப மின்-ஸ்கூட்டரை சந்தைக்குக் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டிருப்பதாக இந்நிறுவனம் கூறியுள்ளது. 2030க்குள் ரூ. 10,000 கோடிக்கு மின்-ஸ்கூட்டரை விற்பனை செய்யவுள்ளதாக கைனெடிக் கிரீன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுலஜ்ஜா ஃபிரோடியா மோட்வானி கூறியுள்ளார். மேலும் இந்த வருவாயில் 60 சதவீதம் இரு சக்கர வாகன வணிகத்தில் இருந்து வரும். அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் 3.0க்கான பார்வையாக இந்நிறுவனத்தில் இருந்து “நாங்கள் குடும்ப மின்-ஸ்கூட்டரை உருவாக்கி வருகிறோம். இது இன்னும் 18 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும். இ-ஸ்கூட்டர் நகர்ப்புற வடிவத்தில் இருக்கும்” என்று சுலஜ்ஜா கூறியுள்ளார். நிறுவனத்தின் இரு சக்கர வாகனத் தொகுப்பில் மூன்று சக்கர வாகனங்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் இ-லூனா ஆகியவை அடங்கும் என்று தெரிவித்துள்ளார். கடந்த…
தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யும் வகையிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் ரூ. 2,000 கோடியில் வளர்ச்சி, உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையம் அமைக்க அமெரிக்காவின் ‘ட்ரில்லியன்ட்’ நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தம் ஆகியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிக அளவில் தமிழ்நாட்டில் நிறுவனங்களை துவங்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது, சான் பிரான்சிஸ்கோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், நோக்கியா உள்ளிட்ட 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் 4,100 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்க கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 500 பேருக்கு வேலை…
பாலிவுட் ஜாம்பவான்களான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனின் பேத்தி தான் நவ்யா நந்தா. தனது குடும்பத்தினரை போல் சினிமாவில் இல்லாமல் தொழில் துறையில் சாதித்து வருகிறார் நவ்யா. அத்துடன் சமூக சேவகராகவும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். 21 வயதிற்குள்ளாகவே தொழில் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தார். சமீபத்தில் புகழ்பெற்ற இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM) அகமதாபாத்தில் மேலாண்மையில் முதுகலைப் படிப்பைப் படிக்க சேர்ந்தார் நவ்யா. தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த புதிய விஷயங்களை பின்தொடர்பவர்களுக்கு தெரிவித்து வருகிறார். யு.எஸ். ஃபோர்டாம் பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் யுஎக்ஸ் டிசைனில் பட்டம் பெற்ற நவ்யா, ப்ராஜெக்ட் நவேலி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். இது இளம் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக சுதந்திரத்தை அடைவதற்காக வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது. நவ்யாவின் தந்தை நிகில் நந்தா, முன்னணி இந்திய பொறியியல் நிறுவனமான எஸ்கார்ட்ஸ்…
கோலிவுட் திரையுலகில் உச்ச நடிகராக திகழும் தளபதி விஜய், தனது தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் உதவியுடன் திரையுலகில் நுழைந்தார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்து, சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்தாலும், விஜய்யின் படங்களுக்காக ரசிகர்கள் இன்னும் காத்திருக்கின்றனர். விஜய் தற்போது ‘கோட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய்யின் பொருளாதார வளர்ச்சியும், ஆடம்பரமான வாழ்க்கை முறையும் தான் இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக அவர் வெற்றி பெற்றதற்குக் காரணம். சென்னை, நீலாங்கரை, கேசுவரினா டிரைவ் தெருவில் அமைந்துள்ள விஜய்யின் கடற்கரை பங்களா, டாம் குரூஸின் புகழ்பெற்ற கடற்கரை இல்லத்தை போல் கட்டப்பட்டது. Housing.com படி, இந்த பங்களா நவீன கட்டிடக்கலை, ஒரு வெள்ளை வெளிப்புறம், அமைதியான கடற்கரை அமைப்பு மற்றும் ஆடம்பரம் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. இந்த வீடு வங்காள விரிகுடாவின்…
ஒன்றிய அரசால் 2015-16 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டம். தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்களுக்கான, மாதாந்திர ஓய்வூதிய திட்டமாக திகழும் இதில், ஒருவர் மாதந்தோறும் ரூ. 5000 வரை பென்ஷனாக பெற முடியும். இந்த ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டம் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம். பல்வேறு நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஒன்றிய அரசு ‘அடல் பென்ஷன் யோஜனா’ என்ற திட்டத்தை துவங்கியது. இதுவரை 7 கோடிக்கும் அதிகமான நபர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைந்துள்ளனர். வயதானவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்கக்கூடிய உத்தரவாதமான திட்டம் இது. 18 வயது முதல் 40 வயது வரையிலான நபர்கள் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யலாம். 18 வயதான ஒருவர் குறைந்தபட்சமாக மாதம் ரூ.210 இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். தினமும் வெறும் 7 ரூபாய் வீதம்…
ஹுருன் இந்தியா 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுயமாக தொழில் உருவாக்கிய டாப் 10 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டில் 47,500 கோடி சொத்து மதிப்புடன் சோஹோ கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் ராதா வேம்பு முதல் இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலமாக பணக்கார இந்தியப் பெண்மணி என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். அரிஸ்டா நெட்வொர்க்கின் ஃபல்குனி நாயர் மற்றும் ஜெயஸ்ரீ உல்லாலின் குடும்பம் ரூ.32,200 கோடி மற்றும் ரூ.32,100 கோடி சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன. கண்ணாடி விற்பனை நிறுவனமான லென்ஸ்கார்ட்டின் இணை நிறுவனரான நேஹா பன்சால், ரூ. 3,100 கோடி சொத்து மதிப்புடன் பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவர் இளம் பெண் தொழில்முனைவோராகஉள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளரான நடிகை ஜுஹி சாவ்லா ரூ.4,600 கோடி சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். ஹுருன் இந்தியா 2024 பணக்கார பட்டியலில்,…
எஸ்கார்ட்ஸ் குபோடா லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார் நிகில் நந்தா. அவரது மேற்பார்வையின் கீழ், இந்த விவசாய இயந்திரங்கள் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சுமார் ரூ. 42,141 கோடி சந்தை மூலதனத்தை ஈட்டியுள்ளது. இதுவும் அவர் வணிக உலகில் உயர்நிலைக்கு வர கை கொடுத்தது. பாலிவுட் ஜாம்பவான்களான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனின் மகள் ஸ்வேதா பச்சனை திருமணம் செய்து கொண்டார் நிகில். இதன் மூலமாக வணிக உலகில் மேலும் பிரபலம் அடைந்தார் நிகில். இவர் டேராடூனில் உள்ள புகழ்பெற்ற டூன் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் வணிக மேலாண்மை படிப்பைத் தொடர்ந்தார். நிதி மற்றும் சந்தைப்படுத்துதலில் வலுவான அடித்தளத்தைப் பெற்ற பிறகு, நிகில் எஸ்கார்ட்ஸ் குபோடா லிமிடெட் நிறுவனத்தில் தனது பயணத்தை துவங்கினார். இதிலிருந்து இவரின் வெற்றி பயணம் ஆரம்பித்தது. நிகில் நந்தாவும் திரையுலகை…