பிரயாக்ராஜில் பிரமாண்டமான மகா கும்பமேளா துவங்கியுள்ளது. இது உலகின் மிகப்பெரிய மக்கள் கூட்டத்துடன் நடைபெறும் நிகழ்வு ஆகும். பிப்ரவரி வரை இந்நிகழ்வு நீடிக்கும். கிட்டத்தட்ட 400 மில்லியன் பக்தர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மீக நிகழ்வு என்பதை தாண்டி, மகா கும்பமேளா 2 டிரில்லியன் அளவிற்கு மிகப்பெரிய வருமானம் ஈட்ட உள்ளது என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது.
உலகளாவிய மதப் பொருளாதாரத்திற்கான மையம்
CAIT இன் பொதுச் செயலாளரும், சாந்தினி சவுக்கின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரவீன் கண்டேல்வால், இந்நிகழ்வு குறித்து விவரித்தார். அவர் கூறும் போது, “மகா கும்பமேளா 2025 உலகின் மிகப்பெரிய மத பொருளாதார மையமாக மாற உள்ளது”. பிரயாக்ராஜின் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவது முதல் போக்குவரத்து மற்றும் சுற்றுலா போன்ற துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக விநியோக மையமான டெல்லி, பிரயாக்ராஜ் மற்றும் அண்டை பகுதிகளுக்கு ரூ. 40,000 கோடி மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கண்டேல்வால் கூறுகிறார்.
பொருளாதார தாக்கம்
இந்நிகழ்வில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் சராசரியாக 5,000 ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மகா கும்பமேளா 2025 பல்வேறு தொழில்களில் குறிப்பிடத்தக்க வணிகத்தை ஊக்குவிக்கும். இதன் முக்கிய வர்த்தக பங்களிப்புகள் குறித்து பார்க்கலாம்.
தங்குமிடம் மற்றும் சுற்றுலா: உள்ளூர் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் வசதிகள் மூலம் ரூ.40,000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு மற்றும் பானங்கள்: பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு மற்றும் பானங்கள் மூலம் ரூ.20,000 கோடி வருமானம் ஈட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.
பூஜைப் பொருட்கள்: விளக்குகள், சிலைகள், தூபங்கள் மற்றும் புத்தகங்கள் விற்பனை மூலம் 20,000 கோடி ரூபாய் கிடைக்கலாம்.
போக்குவரத்து மற்றும் தளவாடங்கள்: சரக்கு, டாக்சிகள் மற்றும் உள்ளூர் போக்குவரத்து சேவைகள் மூலம் ரூ.10,000 கோடி வருமானம் கிடைக்கும்.
சுற்றுலா சேவைகள்: பயண வழிகாட்டிகள் மற்றும் பேக்கேஜ்கள் ரூ.10,000 கோடி வருமானம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கைவினைப் பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்கள்: உள்ளூர் கைவினைப் பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்கள் மூலம் ரூ. 5,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
சுகாதார சேவைகள்: மருத்துவ முகாம்கள் மற்றும் ஆயுர்வேத பொருட்கள் மூலம் ரூ.3,000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்: டிஜிட்டல் கட்டணங்கள், இ-டிக்கெட் மற்றும் இணையத்தள சேவைகள் வாயிலாக ரூ.1,000 கோடி வர்த்தகம் செய்யப்படலாம்.
பொழுதுபோக்கு மற்றும் ஊடகம்: விளம்பரங்கள் வாயிலாக ரூ.10,000 கோடி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கலாச்சார மற்றும் பொருளாதார அதிகார மையம்
மகா கும்பமேளா ஒரு ஆன்மீகக் கூட்டம் மட்டுமல்ல. இது உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரங்களுக்கு மாற்றமான நிகழ்வு. இது வேலைகளை உருவாக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும், மத மற்றும் கலாச்சார மையமாக உத்தரபிரதேசத்தின் நிலையை உயர்த்தவும் நடத்தப்படுகிறது.
“மகா கும்பமேளா 2025 என்பது நம்பிக்கையின் மையம் மட்டுமல்ல. இந்தியாவின் கலாச்சார மற்றும் பொருளாதார வலிமைக்கான சான்றாகும்” என்று கண்டேல்வால் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு மகா கும்பமேளா இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், உலகளாவிய மதப் பொருளாதாரத்தில் தேசத்தின் தலைமையையும் நிறுவும்.
Mahakumbh 2025 in Prayagraj marks the world’s largest spiritual gathering, hosting 400 million devotees and generating an estimated Rs 2 trillion in trade. Learn about its profound cultural and economic significance.