தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் சமந்தா ரூத் பிரபு. இவர் புஷ்பா: தி ரைஸ் படத்தில் “ஊ சொல்றீயா” பாடலில் நடனம் ஆடி புதிய சாதனை படைத்தார். இந்த ஐந்து நிமிட பாடலுக்காக ரூ. 5 கோடி சம்பளமாக பெற்றார் சமந்தா. இந்த பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், இந்தியத் திரையுலகில் ஐட்டம் பாடலுக்கான பெஞ்ச் மார்க்கை உருவாக்கியது.
பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்தாலும், சில சர்ச்சைகளிலும் சிக்கியது. சமந்தா சமீபத்தில் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததை தொடர்ந்து “ஊ சொல்றீயா” பாடலுக்கு நடனமாடினார். இது தவறான முடிவு என பலரும் விமர்சித்தனர். அத்துடன் அவரது நலம் விரும்பிகள் பலர் ஐட்டம் பாடலில் நடனம் ஆட வேண்டாம். இமேஜை பாதிக்கும் என்று அறிவுறுத்தினர். ஆனால் சமந்தா அதை எல்லாம் தாண்டி இந்த பாடலில் நடனமாடினார்.
அவரின் துணிச்சலான முடிவால் ‘ஊ சொல்றீயா’ பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. திரையுலகிலும் சமந்தாவுக்கு ஒரு ரீ என்ட்ரியை கொடுத்தது. “ஊ சொல்றீயா” 2021 ஆம் ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களில் ஒன்றாக மாறியது. “ஊ சொல்றீயா” மூலமாக இந்திய சினிமாவில் ஐட்டம் பாடல்களுக்காக அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக மாறினார் சமந்தா.
சமந்தாவின் துணிச்சலான முடிவுக்ககாகவும், ஒரு ஐட்டம் பாடலுக்குத் தேவையான கவர்ச்சி மற்றும் சிறப்பான நடனத்துக்காகவும் பாராட்டைப் பெற்றார். மேலும் ஒரு முன்னணி நடிகையாக மட்டுமல்ல, கேமியோ தோற்றங்களிலும், ஒரே பாடலிலும் தன்னால் ரசிகர்களை கவர முடியும் என்பதை நிரூபித்தார் சமந்தா. பாலிவுட்டில் பல முன்னணி நடிகைகளை மிஞ்சும் கட்டணத்துடன், “ஊ சொல்றீயா” பாடல் மூலமாக அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளில் ஒருவராக மாறினார் சமந்தா.
Samantha Ruth Prabhu’s electrifying performance in “Oo Antava” from Pushpa: The Rise broke records, earning her Rs 5 crore for a five-minute appearance. Discover the story behind her bold decision and success.