இந்தியாவின் இரயிலே துறை மிகவும் பிரபலமானது. பல வகையான ரயில்களை கொண்ட இந்தியாவில், ஒரு ரயில் அதன் மெதுவான வேகத்திற்காக தனித்து நிற்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?. ஆம். இந்தியாவின் மெதுவான ரயில் என்று அழைக்கப்படும் நீலகிரி மலை ரயில் தான் அது. சுமார் 5 மணி நேரத்தில் வெறும் 46 கி.மீ. மட்டுமே கடக்கும் இந்த ரயில் மெதுவானதாக தோன்றினாலும், இந்த ரயில் தரும் பயண அனுபவம் உண்மையிலேயே சிறப்பானது மற்றும் அனைவரும் அனுபவிக்க வேண்டியது.
மேட்டுப்பாளையத்தில் தொடங்கி ஊட்டியில் முடிவடையும் நீலகிரி மலை ரயில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். பசுமையான தேயிலை தோட்டங்கள், அடர்ந்த காடுகள், பாறை மற்றும் மலைகள் உள்ளிட்ட பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகளின் வழியாக இந்த ரயில் பயணிக்கும். இது பல சுரங்கங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பாலங்கள் வழியாக செல்கிறது. வழியில் பிரம்மிக்க வைக்கும் அழகான காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.
நீலகிரி மலைகளின் அழகினை காணவே இந்த இரயிலில் ஒருமுறை பயணிக்கலாம். இந்திய ரயில்வேக்கு ஒரு தனிப்பட்ட வரலாறு உண்டு. மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மலைக்கு மலை ரயில் பாதை அமைக்க 1854ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. ஆனால் கடினமான மலை நிலப்பரப்பு காரணமாக, கட்டுமானம் 1891ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1908ஆம் ஆண்டில் முடிவடைந்தது. ரயிலின் பழங்கால மரப் பெட்டிகள் பழங்கால உணர்வை அளிக்கிறது.
அத்துடன், மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் பிரமிக்க வைக்கும் காட்சிகளுக்கு இடையே ஒரு அமைதியான ரயில் பயண மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. அத்துடன் இந்த ரயில் பயணம், பயணிகளுக்கு தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத தனித்த அனுபவத்தை வழங்குகிறது.
இந்த ரயிலில் நான்கு மரப் பெட்டிகள் உள்ளன. இதில் முதல் வகுப்பில் 72 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 100 இருக்கைகளும் உள்ளன. 2016ஆம் ஆண்டில், சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய நான்காவது பெட்டி இணைக்கப்பட்டது. இந்த ரயில் பயணத்தின் போது பயணிகள் ஓய்வெடுப்பதுடன் இயற்கை காட்சிகளையும் கண்டு ரசிக்கலாம்.
இரயில்வேயின் IRCTC இணையதளம் மூலமாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யது இந்த ரயிலில் பயணிப்பது நல்லது. ஏனென்றால் விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் நீலகிரி மலை ரயில்வே பிஸியாக இருக்கும். எனவே பயணிகள் தங்கள் இருக்கையை முன்கூட்டியே முன்பதிவு செய்து கொண்டாள் உட்கார்ந்து கொண்டே நீலகிரியின் அழகை கண்டு ரசித்து கொண்டே பயணிக்கலாம்.