கேரளாவில் பிரசித்திப்பெற்ற வழிபாட்டு தளமாக இருக்கிறது சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட இந்தியாவில் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பகதர்கள் ஒவ்வொரு ஆண்டும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, சபரிமலையில் மண்டல – மகரவிளக்கு காலத்தில் தரிசனம் செய்ய போகும் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்த 80,000 பக்தர்கள் மட்டுமே தினமும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜய் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கார்த்திகை மாதத்தில் வரும் மண்டலகால பூஜை, மகரவிளக்கு பூஜைகளுக்கு ஐயப்ப சாமி பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் கடைப்பிடித்து வருடா வருடம் கோவிலுக்கு சென்று வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் சாமி கோவிலில் மண்டலகால பூஜைகள் நவம்பர் 16 ஆம் தேதி முதல் ஆரம்பம் ஆகிறது.
இதற்காக நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்ட உள்ளது. இந்நிலையில் தான் மண்டலகால பூஜை ஏற்பாடுகள், முன்னேற்பாடுகள் குறித்து நேற்றைய தினம் திருவனந்தபுரத்தில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சபரிமலை கோவில் நிர்வாகத்தினர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பக்தர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின் படி வரும் மண்டல காலத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கபப்படும். கடந்த ஆண்டு ‛ஸ்பாட்’ புக்கிங் முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த முறை அதற்கு அனுமதியில்லை. முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களே மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் நாள்தோறும் 80,000 பக்தர்களை மட்டுமே அனுமதி. அப்போது தான் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவின் போதே பக்தர்கள் செல்லும் வழியை தேர்வு செய்து கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நிலக்கல், எருமேலியில் கூடுதல் வாகனங்களை நிறுத்த வசதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
Starting this year, pilgrims visiting the Sabarimala shrine must book online to regulate attendance and enhance their experience. Discover the new online system, daily visitor cap, and ongoing infrastructure improvements.