திருப்பதி லட்டு குறித்து பேசிய தனது சகோதரர் கார்த்தி சார்பில் சூர்யா மன்னிப்பு கேட்டதாக ஒரு ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இணையத்தில் பரவி வரும் இந்த தகவல் முற்றிலும் தவறானது. இந்த விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை. இந்த சந்தேகத்தை கிளப்பிய ட்வீட் போலி கணக்கில் இருந்து பதிவிடப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
சூர்யாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், லட்டு சர்ச்சையைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. விரைவில் வெளியாகவுள்ள தனது தம்பி கார்த்தியின் ‘மெய்யழகன்’ படத்தின் டிரெய்லரை கடைசியாக கடந்த திங்கட்கிழமை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் சூர்யா.
சமீபத்தில் ‘மெய்யழகன்’ படத்தின் புரமோஷனுக்காக ஆந்திராவுக்கு சென்றிருந்த நடிகர் கார்த்தியிடம் திடீரென லட்டு பற்றி கேள்வி எழுப்பபட்டதும், அது மிகவும் சென்சிடிவான விஷயம் லட்டு பற்றி பேச மாட்டேன் என பதிலளித்தார். இதனையடுத்து பவன் கல்யாண் லட்டு பற்றி யாரும் வேடிக்கையாக கூட பேசக் கூடாது என கார்த்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் சர்ச்சைகளை கிளப்பவும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் சூர்யா.
இதனையடுத்து கார்த்தியின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு பவன் கல்யாண் பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். இதற்கு கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் அவருக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிலையில சமூக வலைத்தளங்களில் நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து மன்னிப்பு கூறுவது போல் ஒரு பதிவு இணையத்தில் வைரலானது.
ஆனால் இது அவரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கம் கிடையாது. அவரது ரசிகர் என்ற பெயரில் செயல்பட்டு வரும் போலி கணக்கு. கார்த்தியின் திருப்பதி லட்டு தொடர்பான பேச்சுக்கு சூர்யா எந்தவொரு மன்னிப்பும் கேட்கவில்லை. சூர்யாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கடைசியாக ‘மெய்யழகன்’ படத்தின் டிரெய்லர் பகிரப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் எந்த விதமான பதிவும் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
A viral tweet falsely claims that Suriya apologised for his brother Karthi’s comment on the Tirupati laddu controversy. Channeliam Fact Check confirms it’s fake.