ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் அறிக்கையின் படி உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் என பல பெயர் இடம்பெறுவது வழக்கம். ஆனால் ஃபோர்ப்ஸின் பட்டியல் துல்லியமானதா என்று யாரும் யோசித்தது இல்லை.
ரத்தன் டாடாவைப் பற்றி படிக்கும் போது உலக பணக்காரர்கள் தொடர்பான அறிக்கை குறித்த பலரின் பார்வையை மாற்றும். இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டில் lIFL Wealth Hurun India Rich Listil ரத்தன் டாடா வின் சொத்து மதிப்பு 3,500 கோடியாக இருந்தது. தரவரிசை பட்டியலில் 433வது இடத்தில் இருந்தது.
2022 ஆம் ஆண்டில் 3,800 கோடி நிகர மதிப்புடன் 421 வது இடத்தில் தரவரிசையில் உயர்ந்தது. அவரது முதன்மையான வருமான ஆதாரம் டாடா சன்ஸ் மற்றும் அவரது கீழ் தரவரிசைக்கு முக்கிய பங்களிக்கும் காரணி. டாடா சன்ஸ் மூலம் நிர்வகிக்கப்படும் டாடா நிறுவனங்களின் லாபத்தில் 66%-ஐ டாடா அறக்கட்டளைகள் மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு பயன்படுத்தி வருகிறது. இது பாராட்டுக்கு உரிய செயலாகும்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியலில் ரத்தன் டாடா இடம்பெறாததற்கு காரணம், ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் சலுகைகளையும் வழங்குவதை முக்கிய நோக்கமாக கொண்டதே. டாடா டிரஸ்ட்கள் பல்வேறு தொண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் டாடா குழுமத்தின் முதன்மை முதலீட்டு நிறுவனமான டாடா சன்ஸ், அதன் லாபத்தின் பெரும்பகுதியை தொண்டு நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.
இந்த திட்டங்களில் பெரும்பாலானவை சுகாதாரம், கல்வி, வேலை உருவாக்கம் மற்றும் சமூக முன்னேற்றம் உள்ளிட்ட சேவைகளில் கவனம் செலுத்துகின்றன. இதன் காரணமாக, டாடாவின் செல்வத்தின் கணிசமான பகுதி தனிப்பட்ட நலனுக்காகப் பயன்படுத்தப்படாமல், ஏழை எளிய மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. இதுவே சொத்து மதிப்பிற்கான தரவரிசையில் டாடா பின்னடைவை சந்திக்க காரணமாக அமைகிறது.
டாடா நிறுவனம் சமூகத்திற்கு எப்பொழுதும் வலுவான உதவிகளை வழங்கி வருகின்றது. சமூகத்திற்கான உதவிகளையும் சலுகைகளையும் வழங்கும் பெரும் நிறுவனங்களில் டாடா நிறுவனமே முதன்மை நிலையில் உள்ளது. டாடா குழுமம் சொத்து மதிப்பிலான தரவரிசை பட்டியலில் எத்தகைய இடத்தை பெற்றிருந்தாலும் சமூகத்திற்காக ஆற்றும் தொண்டுகளிலும் வழங்கும் நல உதவக்கு திட்டங்களிலும் தொடர்ச்சியாக மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து வருகிறது.
Ratan Tata’s wealth may not place him among the richest globally, but his dedication to charity through Tata Trusts sets him apart as a major philanthropist. Discover why he focuses on giving back rather than accumulating wealth.