தேசிய தலைநகரின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்கிறார். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து, தற்போது கல்வி அமைச்சராக பதவி வகித்து வரும் அதிஷி, முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
2013-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் அதிஷி சேர்ந்த சமயமே கட்சியின் கொள்கை திட்ட உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா கைதானப்பின், டெல்லியில் ஆம் ஆத்மியின் முக்கிய முகமாக இருந்தவர் இவர் தான். இவர் 2023-ல் தான் டெல்லி கல்வி அமைச்சராக பதவியேற்று இருந்தாலும், அதிஷி 2015 முதல் 2018 வரை சிசோடியாவுக்கு கல்வித்துறை சம்மந்தமான ஆலோசகராக இருந்திருக்கிறார்.
தற்போது இவர் கல்வித்துறை மட்டுமல்லாது பொதுப்பணித்துறை, கலாச்சாரம், சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் தற்போது முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித் ஆகியோருக்குப் பிறகு, டெல்லியை வழிநடத்த போகும் பெண்மணி என்ற பெருமை அதிஷிக்கு உண்டு.
அதிஷியின் நிகர மதிப்பு என்ன?
சமீபத்திய பிரமாணப் பத்திரத்தின்படி, அதிஷி தனக்கு ரூ.1.41 கோடி மதிப்புள்ள நிதி சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மற்றும் பொறுப்புகள் எதுவும் பட்டியலிடப்படவில்லை. அதிஷியின் நிகர மதிப்பு ரூ.1,20,12,824 (ஒரு கோடியே 20 லட்சம்). இதற்கிடையில், மதிப்பிடப்பட்ட மொத்தத் தொகை சற்று அதிகமாக ரூ.1,25,12,823 ஆகும்.
1. கையில் ரொக்கம்: ரூ 50,000 (சொந்த உடைமை), ரூ 15,000 (கணவர்), மொத்தம் ரூ 65,000.
2. வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் முதலீடுகள்: ரூ.1,00,87,323.
3. NSS, அஞ்சல் சேமிப்பு போன்றவை: ரூ.18,60,500.
4. எல்ஐசி அல்லது பிற காப்பீட்டு பாலிசிகள்: ரூ.5,00,000.
அதிஷியின் கணவர் யார்?
அதிஷியின் கணவர் பிரவீன் சிங் ஐஐடி மற்றும் ஐஐஎம் பட்டதாரி ஆவார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு, அதிஷியும் அவரது கணவரும் 2007 இல் கம்யூனை நிறுவினர். “கிராம ஸ்வராஜ்” (கிராம சுயராஜ்யம்) மற்றும் “மனிதாபிமான கல்வி” ஆகியவற்றின் இலட்சியங்களை நிலைநிறுத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. முதன்மையாக மத்தியப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு, அவர்கள் சமூக வாழ்க்கையை வளர்ப்பதற்கும் முழுமையான கல்வி மதிப்புகளை மேம்படுத்துவதற்கும் தங்கள் முயற்சிகளைத் தொடர்கின்றனர்.