UPI அல்லது Unified Payment Interface அமைப்பு இந்திய நிதித்துறையில் ஒரு புரட்சியின் தொடக்கமாக இருந்தது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வலுப்படுத்தும் நோக்கில் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டபோது, UPI இவ்வளவு பிரபலமாகிவிடும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இதேபோல், தற்போது ரிசர்வ் வங்கி புதிய வசதியை வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வந்துள்ளது.
யூனிஃபைட் லெண்டிங் இன்டர்ஃபேஸ் என்ற நிகழ்நேர கடன் வழங்கும் திட்டத்தை ஆர்பிஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த அமைப்பு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று அறிவித்திருந்தார். சிறு மற்றும் கிராமப்புற கடன் வாங்குபவர்களை மையமாக வைத்து ரிசர்வ் வங்கி யுஎல்ஐ திட்டத்தை கொண்டு வருகிறது. கடந்த ஆண்டில் சில இடங்களில் மட்டும் இந்த புதிய தொழில்நுட்ப தளம் ஒரு முன்னோடி திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தற்போது நாடு முழுவதும் கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
தற்போது கடன் பெறுவதற்கு பல தடவைகள் வங்கிகளுக்கு அலைய வேண்டியுள்ளது. இந்நிலையில் யுஎல்ஐ வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதை எளிதாக்குகிறது. ஏனென்றால் கடன் வழங்கும் நிறுவனங்கள், நிலப் பதிவுகள் போன்ற முக்கியமான டிஜிட்டல் தகவல்களை ஒரே இடத்திலிருந்து பெற முடியும்.
சிறு கடன் வாங்குபவர்களுக்கு கடன்களை வழங்குவதன் ஒரு பகுதியாக மதிப்பீடு மற்றும் தரவு சேகரிப்பு விரைவாக தயாரிக்கப்படுகிறது. தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பல்வேறு ஆவணங்கள் மற்றும் தகவல்கள் கடன் வழங்குபவர்களுக்கு எளிதாகக் கிடைக்கும்.
முன்னதாக, யுனிஃபைட் லெண்டிங் இன்டர்ஃபேஸ் கடந்த ஆண்டு சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் யுஎல்ஐ வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கி நம்புகிறது.
ULI இன் முக்கிய அம்சங்கள்
* சிறு கடன் வாங்குபவர்களுக்கு கடன்களை வழங்குவதை எளிதாக்கிறது.
* தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது
* பல்வேறு ஆவணங்கள் மற்றும் தகவல்கள் கடன் வழங்குபவர்களுக்கு எளிதாகக் கிடைக்கும்
* பல அமைப்புகளின் ஒருங்கிணைப்பால் ஏற்படும் சிக்கலைக் குறைக்கிறது.
The Reserve Bank of India (RBI) has launched the Unified Lending Interface (ULI), a platform to simplify and expedite loan processes, particularly for rural and small-scale borrowers. ULI is expected to revolutionize credit access in agriculture and MSMEs by streamlining digital information flow and reducing loan processing times.