நாக சைதன்யாவுக்கும் நடிகை ஷோபிதா துலிபாலாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனா அக்கினேனி வெளியிட்ட இந்த செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த மகிழ்ச்சியான செய்திக்கு மத்தியில், நாகர்ஜுனா குடும்பத்தின் சொத்து மதிப்பு குறித்து தான் ரசிகர்கள் அதிகம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியும் நடிகையுமான சமந்தா விவாகரத்து பெற்று குடும்பத்தை விட்டு வெளியேறிய பிறகு அக்கினேனி குடும்பத்தின் சொத்து மதிப்பில் ரூ.100 கோடி குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டதன் மூலமாக அக்கினேனி குடும்பத்தில் சேர்ந்தார் நடிகை சமந்தா.
இந்த திருமணத்திற்குப் பிறகு, அவர்களின் மொத்த சொத்து கணிசமாக உயர்ந்தது மற்றும் சுமார் 100 கோடி இந்த குடும்பத்திற்கு வந்தது. இதனையடுத்து சமந்தாவுடனான விவகாரத்திற்கு பின் அக்கினேனி குடும்பத்தின் சொத்து மதிப்பில் ரூ.100 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அக்கினேனி குடும்பம் இன்னமும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளது,
தற்போது இந்த குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 3654 கோடி. இந்த செல்வத்தின் பெரும்பகுதி நாகார்ஜுனாவுக்கு சொந்தமானது. அவரது தனிப்பட்ட சொத்து 3000 கோடியைத் தாண்டியுள்ளது. அவரது மகன்கள் அகில் அக்கினேனி மற்றும் நாக சைதன்யா இருவரும் குடும்பத்தின் செல்வத்தை அதிகரிப்பதில் சளைத்தவர்கள் அல்ல.
64 வயதான நாகார்ஜுனாவின் நிகர மதிப்பு சுமார் 410 மில்லியன் டாலர்கள், அதாவது சுமார் ரூ.3441 கோடி. மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பல சொத்துக்கள் உட்பட குறிப்பிடத்தக்க ரியல் எஸ்டேட் முதலீடுகளையும் கைவசம் வைத்துள்ளார். ஜுப்லி ஹில்ஸில் உள்ள அவரது பூர்வீக வீட்டின் மதிப்பு ரூ.50 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மூத்த மகன் நாக சைதன்யாவுக்கு மட்டும் 154 கோடி சொத்து உள்ளது. நாக சைதன்யா ஒரு படத்திற்கு 8 முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். நாகார்ஜுனா மற்றும் அமலாவின் இளைய மகனான அகில் அக்கினேனியும் தனது தந்தை மற்றும் சகோதரரின் வழியில் சினிமாவிற்கு வந்தார். அகில் ஏற்கனவே சுமார் 59 கோடி சொத்துக்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The Akkineni family’s net worth stands at ₹3,654 crore, with Nagarjuna holding ₹3,441 crore of it. Recent events, including Naga Chaitanya’s divorce from Samantha Ruth Prabhu and his engagement to Sobhita Dhulipala, have impacted the family’s wealth. Discover the financial details of Nagarjuna, Naga Chaitanya, and Akhil Akkineni.