தெற்கு ரயில்வே சென்னையில் பயணிகளுக்கு தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக, முதல் குளிர்சாதன வசதி கொண்ட EMU (மின்சார மல்டிபிள் யூனிட்) ரயில் சேவையை சென்னை கடற்கரை-செங்கல்பட்டு பிரிவில் அறிமுகப்படுத்தியது.

சென்னை ஐ.சி.எப்., ஆலையில், தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட முதல் ‘ஏசி’ மின்சார ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்கும் படி இந்த ஏசி ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ‘ஏசி’ மின்சார ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 6 ஆம் தேதி துவங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், துவங்கப்படவில்லை. இந்நிலையில், சென்னையில் முதல் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை ஏப்ரல்19 ஆம் தேதி துவங்கியுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7, பிற்பகல் 3:45, இரவு 7:35 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் ‘ஏசி’ ரயில், தாம்பரத்துக்கு காலை 7:42, மாலை 4:26, இரவு 8.30 மணி ஆகிய நேரங்களில் சென்றடைகிறது. அங்கிருந்து புறப்படும் முதல் இரண்டு சேவை, செங்கல்பட்டுக்கு முறையே காலை 8:35, மாலை 5:25 மணிக்கு செல்கிறது.
செங்கல்பட்டில் இருந்து காலை 9, மாலை 5:45 மணிக்கு புறப்படும் ரயில், தாம்பரத்துக்கு காலை 9:41, மாலை 6:26 மணிக்கு வருகிறது. அங்கிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 10:30, இரவு 7:15 மணிக்கு செல்கிறது. தாம்பரத்தில் அதிகாலை 5:45 மணி ரயில் புறப்பட்டு , காலை 6:45 மணிக்கு கடற்கரைக்கு இயக்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையின் (ICF) முன்னாள் ஊழியரும் பயணியுமான கே. சங்கர் பாபு கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பாக்க ICF-ல் முதல் குளிர்சாதன பெட்டிகள் தயாரிக்கப்பட்டபோது, அவற்றின் ரேக்குகள் மத்திய மற்றும் மேற்கு ரயில்வேக்கு சென்றுவிட்டன. தெற்கு ரயில்வேக்கு குளிர்சாதன பெட்டிகள் ஒதுக்கப்படுவது இதுவே முதல் தடவை. பயனர்களிடமிருந்து வந்த கருத்துகளைத் தொடர்ந்து, இப்போது புதிய அம்சங்களும் ரயில்களில் சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
யில்வே நிர்வா
“இந்த ஏசி EMU உள்ளூர் பயணிகளுக்கு மிகவும் வசதியானது. சிசிடிவிகள் மற்றும் தீயணைப்பு எச்சரிக்கைகள் போன்ற கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ‘ஏசி’ மின்சார ரயில் அதிகாலையில் தாம்பரம் பணிமனையில் இருந்து புறப்பட்டு கடற்கரை வந்தடையும் போதும், இரவில் கடற்கரையில் இருந்து தாம்பரம் பணிமனைக்கும் செல்லும் போதும் புறநகர் பாதையில் இயக்கப்படும்.
பிரதான பாதையில் செல்லும்போது, இந்த ரயில் கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்துார், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனுார் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
ஏசி மின்சார ரயில் கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.35-ம், அதிகபட்சமாக ரூ.105ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில் முதல் வகுப்பு சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் இந்த ரயிலில் பயணிக்க அனுமதி கிடையாது. இந்த ரயிலுக்காக தனி கட்டண அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Southern Railway has launched Chennai’s first AC EMU train on the Beach–Chengalpattu route, offering improved comfort, CCTV, and fire safety. Check timings, route, and fares.