1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ச்சியான தோல்விப் படங்களால் தொழில் வாழ்க்கையில் சரிவைச் சந்தித்தார். இருப்பினும், சந்திரமுகி மற்றும் எந்திரன் படங்களின் பிரம்மாண்ட வெற்றிகள் மூலமாக தனது நட்சத்திர அந்தஸ்தை மீட்டெடுத்தார். 2010களின் பிற்பகுதியில், அவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூலை குவிக்க துவங்கின. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களைக் கூட விட திரையுலகில் தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.

ஜெயிலர் வசூல் சாதனை
கடந்த 2023 ஆம் ஆண்டில், தனது 72 வயதில், ரஜினிகாந்த் ஜெயிலரில் நடித்தார். இது அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படமாக சாதனை படைத்தது. இப்படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. படத்திற்காக, அவர் ரூ. 110 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றி காரணமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறனிடமிருந்து ரூ. 100 கோடி வரை கூடுதலாக பெற்றதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஒரே படத்திலிருந்து மொத்தம் ரூ. 210 கோடி சம்பாதித்தார் ரஜினிகாந்த். ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் பிரபாஸ் போன்ற முன்னணி நட்சத்திரங்களை விட, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகியுள்ளார்.
கூலி
ஜெயிலரின் வெற்றியைப் போல அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், ரஜினிகாந்த் தனது அதிகம் சம்பளம் பெறும் இடத்தை தக்க வைத்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘கூலி’ படம் எதிர்பார்ப்பதை போல் மிகப்பெரிய வெற்றியை பெற்றால் ரூ. 270 கோடி வரை ரஜினிகாந்த் சம்பளமாக பெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய சினிமா வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக அவரை உயர்த்துகிறது.
அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்
ரஜினிகாந்தின் சம்பளம் அவரது வயதை ஒத்த நடிகர்கள் பெறாத ஒன்றாக உள்ளது. ஆனால், அவரை விட சில இளம் நடிகர்கள் அதிகமாக சம்பளம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். விஜய் தனது இறுதிப் படத்திற்காக ரூ. 275 கோடி சம்பளம் வரை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தின் மூலமாக ரூ. 300 கோடி வரை சம்பளமாக பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாக்ஸ் ஆபிஸ் சாதனை
74 வயதிலும் கூட, ரஜினிகாந்தின் தொடர்ச்சியான சினிமா பயணம் மற்றும் வசூல் சாதனை அவரது நீடித்த புகழையும், ரசிகர்கள் மத்தியிலான ஈர்ப்பையும் பிரதிபலிப்பதாக உள்ளது. இவ்வளவு பெரிய புகழும், அவர் பெறும் சம்பளமும் அவரது நட்சத்திர அந்தஸ்தை மட்டுமல்லாமல், பல தசாப்த காலமாக பார்வையாளர்களை கவர்வதையும், வலுவான பாக்ஸ் ஆபிஸ் சாதனையையும் பிரதிபலிக்கிறது.