2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை தனது நெட்ஃபிளிக்ஸ் திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்துவதை தடுத்ததாக நடிகை நயன்தாரா, நடிகர் தனுஷ் மீது குற்றம் சுமத்தினார். இதற்கிடையில், தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம்,காப்புரிமை மீறலுக்காக ரூ.10 மில்லியன் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது.

அனுமதியில்லாமல் காட்சிகளைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேலில் என்ற திருமண ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ பட காட்சிகளை தடையில்லா சான்றிதழ் (NOC) பெறாமல் பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. மேலும், படப்பிடிப்பின் நயன்தாரா மீது விக்னேஷ் சிவன் அதிக கவனம் செலுத்தியதாகவும், இதனால் பட்ஜெட் அதிகமானதாகவும் வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இருந்து குற்றம்சாட்டப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பு
நயன்தாராவின் திருமணம் ஆவணப்படம் ஏற்கனவே நவம்பர் 18, 2024 அன்று வெளியிடப்பட்டது என்பதைக் குறிப்பிட்டு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. அதற்கு பதிலாக நீதிமன்றம் ஏப்ரல் 9 ஆம் தேதி முழு விசாரணையையும் நடத்த திட்டமிட்டுள்ளது.
நயன்தாராவின் குற்றச்சாட்டு
நவம்பர் 16, 2024 அன்று தங்கள் தரப்பில் இருந்து பலமுறை கோரிக்கை விடுத்தும், தனுஷ் ‘நானும் ரவுடி தான்’ படக்காட்சிகளை பயன்படுத்த அனுமதி மறுத்ததாக நயன்தாரா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும், ஆவணப்படத்தில் படக்காட்சிகள் எதுவும் பயன்படுத்தவில்லை. ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்த காட்சிகளை மட்டுமே பயன்படுத்தி இருப்பதாக நயன்தாரா தரப்பு தெரிவித்தது.
சட்ட நடவடிக்கை எடுத்த தனுஷ்
நயன்தாராவின் குற்றச்சாட்டிற்கு தனுஷ் பகிரங்கமாக பதிலளிக்கவில்லை என்றாலும், அவர் நெட்ஃபிளிக்ஸ், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனவரி 28 அன்று, தனுஷின் வழக்கை நிராகரிக்க நெட்ஃபிளிக்ஸ் இந்தியா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து இந்த வழக்கும் மேலும் தீவிரமடைந்துள்ளது.
Nayanthara criticizes Dhanush for blocking Naanum Rowdy Dhaan footage in her Netflix documentary. Meanwhile, Wunderbar Films files a ₹10 million lawsuit for copyright infringement. The legal battle continues.