பிரபல வினாடி வினா அடிப்படையிலான விளையாட்டு நிகழ்ச்சியான கோன் பனேகா குரோர்பதி (KBC) ஜுலை 3, 2025 அன்று 25 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. 2007 ஆம் ஆண்டு மூன்றாவது சீசனை ஷாருக்கான் தொகுத்து வழங்கியதைத் தவிர, கிட்டத்தட்ட முழு நிகழ்ச்சியையும் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கினார். இந்தியாவின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாகத் கோன் பனேகா குரோர்பதி (KBC) தொடர்கிறது.
தற்போது, பச்சன் KBC 16 ஐ தொகுத்து வழங்குகிறார். கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி துவங்கிய இந்த சீசன் கடந்த ஏழு மாதங்களாக சோனி என்டர்டெயின்மென்ட் தொலைக்காட்சி மற்றும் சோனிலிவ் ஆகியவற்றில் ஒளிபரப்பாகி வருகிறது. 150 எபிசோடுகளைத் தாண்டியுள்ளது.
KBC 16 பச்சனின் கடைசி சீசனா?
KBC 16 அமிதாப் பச்சனின் கடைசி சீசனாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 82 வயதான ஜாம்பவான் KBC 15 இன் இறுதி எபிசோடின் போது உணர்ச்சிவசப்பட்டு விடைபெற்றார். மேலும் அவருக்கு பதிலாக வேறொரு ஆளை கண்டுபிடிக்க சேனளிடம் கோரிக்கை வைத்தார். ஆனாலும் சரியான ஆள் கிடைக்காததால், பச்சன் KBC 16 நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கினார். தற்போது நடைபெற்று வரும் சீசன் நிகழ்ச்சியிலேயே மிக நீண்டதாக இருப்பதால், அடுத்த சீசனில் புதிய தொகுப்பாளர் இடம்பெறுவார் என்ற ஊகங்கள் வலுவடைய துவங்கியுள்ளது.
KBC-யின் அடுத்த தொகுப்பாளர் யார்?
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹ்யூமன் பிராண்ட்ஸ் (IIHB) மற்றும் ரெடிஃபியூஷனின் ரெட் லேப் இணைந்து நடத்திய சமீபத்திய ஆராய்ச்சி ஆய்வில், இந்தியாவின் இந்தி பேசும் பகுதிகளில் 768 பேர்களிடம் (408 ஆண்கள் மற்றும் 360 பெண்கள்) அமிதாப் பச்சனுக்குப் பிறகு பார்வையாளர்கள் விரும்பும் தொகுப்பாளரை அடையாளம் காண ஆய்வு செய்யப்பட்டது.
கணக்கெடுப்பின்படி:
ஷாருக்கான் 63% வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஐஸ்வர்யா ராய் பச்சன் 51% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
எம்.எஸ். தோனி (37%), ஹர்ஷா போக்லே (32%) மற்றும் அனில் கபூர் (15%) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தை பிடித்தனர்.
இதில் சுவாரஸ்யமாக, பதிலளித்தவர்களில் 42% பேர் பச்சன் முடிந்தவரை நீண்ட காலம் தொகுப்பாளராகத் தொடர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பரிந்துரைக்கப்பட்ட பிற பெயர்களில் அமீர்கான், மாதுரி தீட்சித், சசி தரூர் மற்றும் சேதன் பகத் ஆகியோரும் அடங்குவர்.
பச்சன் விடைபெறுவாரா?
KBC 16 அமிதாப் பச்சனின் இறுதி சீசனாக இருக்குமா என்பது குறித்தான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை. தற்போது, அனைவரின் பார்வையும் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியின் மீது உள்ளது. தொகுப்பாளராக அமிதாப் பச்சன் தொடருவாரா அல்லது இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் கேம் ஷோக்களில் ஒன்றை ஒரு புதிய முகம் கைப்பற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
As KBC completes 25 years in 2025, speculation rises over Amitabh Bachchan’s exit. Reports suggest KBC 16 may be his final season, with Shah Rukh Khan leading the list of potential successors.