தனியார் கார் உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலை பயணத்தை எளிதாக்கும் விதமாகும், அரசாங்கம் இரண்டு டோல் பாஸ் விருப்பங்களை அறிமுகப்படுத்த பரிசீலித்து வருகிறது:

வருடாந்திர டோல் பாஸ்: ஒரு வருடத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளில் வரம்பற்ற பயணத்திற்காக டோல் பாஸிற்கு ரூ. 3,000 நிர்ணயித்துள்ளது.
வாழ்நாள் டோல் பாஸ்: அதே போல் 15 ஆண்டுகளுக்கு வரம்பற்ற நெடுஞ்சாலை பயணத்திற்கு ரூ. 30,000.
இரண்டு பாஸ்களும் FASTags உடன் இணைக்கப்பட்டு, தனித்தனி பணம் செலுத்தும் முறையில்லாமல் தடையற்ற, டோல் வசூல் முறையை உறுதி செய்யப்படவுள்ளது.
அடிக்கடி பயணம் மேற்கொள்வோருக்கு பெரும் நிவாரணம்
தற்போது, தனியார் வாகன உரிமையாளர்கள் ஒரு டோல் பிளாசா ஒன்றுக்கு ரூ. 340 விலையில் மாதாந்திர பாஸ்களை மட்டுமே வாங்க முடியும். மொத்தமாக ஆண்டுக்கு ரூ. 4,080 செலவாகும். இந்த பாஸ்கள் ஒற்றை பிளாசாவிற்கு செல்லுபடியாகும் மற்றும் முகவரி சரிபார்ப்பும் தேவைப்படுகிறது. புதிய ரூ. 3,000 வருடாந்திர பாஸ், முழு தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க்கையும் உள்ளடக்கியது. வழக்கமான பயணிகளுக்கு குறைந்த செலவிலான சரியான தேர்வாக இருக்கும்.
டோல் பிளாசா பிரச்சினைகளுக்கு தீர்வு
இந்த முன்முயற்சியானது பல நீண்டகால புகார்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அவற்றுள், நகராட்சி எல்லைக்குள் அடிக்கடி சுங்கச்சாவடிகள்.
60 கி.மீ.க்கும் குறைவான இடைவெளியில் சுங்கச்சாவடிகள்.
சுங்கச்சாவடிகளில் தகராறு மற்றும் வன்முறை சம்பவங்களை தீர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
எளிதான, அதே நேரம் நிலையான விலை மூலமாக, நெரிசல் மற்றும் பயணிகளின் கவலையை போக்கும். அத்துடன், சுங்கக் கட்டணத்தை முறைப்படுத்தவும் அரசாங்கம் விரும்புகிறது.
நிதி மற்றும் வருவாய் பாதிப்பு
2023-24 ஆம் ஆண்டில், இந்தியாவின் டோல் வருவாய் ரூ. 55,000 கோடியாக இருந்தது. தனியார் கார்கள் ரூ. 8,000 கோடி பங்களித்தன. மொத்த பரிவர்த்தனைகளில் 53% இருந்தாலும், தனியார் வாகனங்கள் மொத்த டோல் வருவாயில் வெறும் 21% மட்டுமே. கூடுதலாக, நெரிசல் நேரங்களில் (காலை 6 – இரவு 10 மணி) நெடுஞ்சாலை போக்குவரத்தில் கிட்டத்தட்ட 60% தனியார் வாகனங்களில் இருந்து வருகிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆரம்பத்தில் வருவாயில் சரிவைக் காணும். அதே வேளையில், காலப்போக்கில், நிலையான வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள். இந்தத் திட்டம் அதிக கார் வைத்திருக்கும் உரிமையாளர்களை ஈர்க்கும். ஏய்ப்பைக் குறைத்து, சுமூகமான நெடுஞ்சாலைச் செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி கட்டம்
இந்த முன்மொழிவு சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் அதன் இறுதி கட்டத்தில் உள்ளது. மேலும் விவரங்களை இறுதி செய்வதற்கான விவாதங்கள் நடந்து வருகின்றன. அங்கீகரிக்கப்பட்டதும் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் இந்தியாவின் விரிவடைந்து வரும் நெடுஞ்சாலை துறை முழுவதும் தனியார் வாகன உரிமையாளர்களுக்கு பயணிக்க செலவு குறைந்த மற்றும் வசதியான வழியை வழங்கும்.
The Indian government plans to introduce annual and lifetime toll passes for private vehicles, offering unlimited highway access at a fixed cost via FASTag.