ஜம்மு – காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள காகங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் ‘இசட்’ வடிவ சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 13, 2025 அன்று திறந்து வைத்துள்ளார். ரூ. 2,400 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட 6.5 கிலோமீட்டர் சுரங்கப்பாதை, ககாங்கிரை சோனாமார்க்குடன் இணைக்கிறது. சுரங்கப்பாதை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.
சுரங்கப்பாதையின் முக்கியத்துவம்
8,650 அடி உயரத்தில் அமைந்துள்ள ‘இசட்’ வடிவ சுரங்கப்பாதை இந்தியாவின் பாதுகாப்பிற்கு முக்கியமானது மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பாதைகளைத் தவிர்த்து லடாக்கிற்கான இணைப்பை மேம்படுத்துகிறது. இது இருவழிச் சாலை மற்றும் ஒரு இணையான தப்பிக்கும் பாதையைக் கொண்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை பொதுமக்கள் மற்றும் இராணுவ வாகனங்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறது. கட்டுமானத்தில் உள்ள சோஜிலா சுரங்கப்பாதையுடன் சேர்ந்து, இது ஆண்டு முழுவதும் லடாக்கிற்கு தடையற்ற பயணத்தை உறுதி செய்யும்.
குளிர்கால சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதாரம்
முன்பு பனிப்பொழிவு காரணமாக குளிர்காலத்தில் அணுக முடியாத சோனமார்க்கில், தற்போது ஆண்டு முழுவதும் பயணிக்கலாம். குளிர்கால சுற்றுலா மற்றும் சாகச விளையாட்டுகளுக்கான மையமாக இப்பகுதி மாறும். இந்த சுரங்கப்பாதை குல்மார்க்கை ஒரு பிரதான பனிச்சறுக்கு இடமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சுற்றுலா மற்றும் உள்ளூர் வாழ்வாதாரத்திற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும்.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள்
அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த சுரங்கப்பாதை ஸ்ரீநகர் மற்றும் சோனாமார்க் இடையே பயண நேரத்தை கணிசமாக குறைக்கும். வாகனங்கள் இப்போது மணிக்கு 70 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். சுரங்கப்பாதை ஒரு மணி நேரத்திற்கு 1,000 வாகனங்களைக் கையாளும். இது சாலை உள்கட்டமைப்பிற்கான புதிய தரத்தைக் குறிக்கிறது.
நீண்ட பயணம்
சோனாமார்க் சுரங்கப்பாதையின் பணிகள் மே 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் பொருளாதார சவால்கள் காரணமாக 2018 ஆம் ஆண்டு இந்த பணிகள் நிறுத்தப்பட்டதால் இந்த திட்டம் முடிவடைய தாமதம் ஏற்பட்டது. பின்னர், இந்தத் திட்டம், அக்டோபர் 2012 ஆம் ஆண்டு அப்போதைய தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக இருந்த சி.பி.ஜோஷியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
கேம் சேஞ்சர்
‘இசட்’ வடிவ சுரங்கப்பாதையானது ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயணம் மற்றும் சுற்றுலாவை மறுவரையறை செய்யும். அத்துடன் ஆண்டு முழுவதும் பயணத்து உறுதி செய்யும். மேலும், உள்ளூர் பொருளாதாரங்களை மேம்படுத்தும். அது மட்டுமல்லாமல் லடாக் பிராந்தியத்தில் நாட்டின் பாதுகாப்புத் தேவைகளைப் பொறுத்தவரை சோனாமார்க் சுரங்கப்பாதை மிகவும் முக்கியமானது.
PM Narendra Modi will inaugurate the 6.5 km Z-Morh tunnel in Jammu and Kashmir on January 13, 2025. This ₹2,400 crore project ensures year-round access to Sonamarg and Ladakh, boosting connectivity, winter tourism, and local economies.