பங்குகளை விற்பது, சந்தை நிலவரங்கள், நேரம் மற்றும் முதலீட்டு உத்திகளைப் பொறுத்து லாபம் அல்லது இழப்பு அமையும். அப்படி பங்குகளை விற்று செல்வந்தர் ஆனவர்களில் SaaS நிறுவனமான Freshworks இன் இணை நிறுவனர் மற்றும் செயல் தலைவர் கிரிஷ் மாத்ருபூதம் ஒரு சிறந்த உதாரணம். டிசம்பர் 2024 இல், அவர் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் பங்குகளை விற்று $39.6 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ. 336.41 கோடி) சம்பாதித்துள்ளார். ஒரு பங்குக்கு $15.33 முதல் $16.50 வரையிலான விலைகளுடன் பங்கு பரிவர்த்தனைகளில் விற்பனை நிகழ்ந்துள்ளது.
கிரிஷ் மாத்ருபூதம் 12 ஆம் வகுப்பு தோல்வி அடைந்த போது உறவினர்கள் அவரை பல விதங்களில் விமர்சனம் செய்தனர். “ரிக்ஷா இழுப்பவர்” என்றெல்லாம் முத்திரை குத்தினர். இந்த சவால்களை எல்லாம் எதிர்கொண்ட போதிலும், ஊக்கத்துடன் போராடினார் மாத்ருபூதம். HCL மற்றும் Zoho இல் வெற்றிகரமான வாழ்க்கைக்குப் பிறகு, அவர் துணைத் தலைவராக உயர்ந்தார். கடந்த 2010 ஆம் ஆண்டில் கிரிஷ் மாத்ருபூதம், ஃப்ரெஷ்வொர்க்ஸை நிறுவினார். அவரது தலைமையின் கீழ், நிறுவனம் உலகளவில் விரிவடைந்தது. அத்துடன் நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டது. 500 ஊழியர்களை மில்லியனர்கள் ஆக்கியது.
2024 இல், ஃப்ரெஷ்வொர்க்ஸ் மாற்றங்களை எதிர்கொண்டது. இதில் மாத்ருபூதம் நிறுவனத்தின் CEO செயல்திறன் விருது ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், பின்னர் அவருக்கு $19 மில்லியன் மதிப்புள்ள புதிய ஈக்விட்டி விருது வழங்கப்பட்டது. 60க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதுடன், SaaSBoomi மற்றும் டுகெதர் ஃபண்டை நிறுவியும் கிரிஷ் தொழில்துறையில் முக்கிய நபராக திகழ்கிறார். பின்னடைவுகளில் இருந்து வெற்றியை நோக்கிய அவரது பயணம் தொழில்முனைவோர்களாக உயர துடிப்பவர்களுக்கு ஒரு எழுச்சியூட்டும் உதாரணம்.
Discover how Girish Mathrubhutham, co-founder of Freshworks, sold 2.5 million shares for $39.6 million. Learn about his inspiring journey from setbacks to global success as a SaaS leader.