பொறியியல் மாணவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கும் விதமாக திருச்சி என்ஐடி கல்லூரி வளாகத்தில் என்ஐடி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிப்பு பூங்கா ரூ. 150 கோடி செலவில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்படவுள்ளது.
இது குறித்து திருச்சி என்ஐடி இயக்குனர் அகிலா மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் மகாலிங்கம் ஆகியோர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, வைர விழா காணவுள்ள திருச்சி என்ஐடி கல்வி நிறுவனத்தில் பயின்ற 48,000 முன்னாள் மாணவர்கள் உலகில் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இவர்களில் 930 பேர் பல்வேறு நிறுவனங்களில் தலைமை செயலதிகாரிகளாகவும், 100க்கும் அதிகமானோர் பல்வேறு பணிகளிலும் பணியாற்றி கொண்டிருக்கின்றனர்.
1987 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் என்ஐடி முன்னாள் மாணவர்கள் சங்கம் எங்களது கல்வி நிறுவனம் மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்கும் கல்விக்கும் உறுதுணையாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது வரும் ஜனவரி நான்காம் தேதி என்ஐடி முன்னாள் மாணவர் சங்கத்தின் உலகளாவிய சந்திப்பு நிகழ்ச்சி சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது. இந்த சந்திப்பில் 1500 முன்னாள் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், google நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தலைமை உளவியலாளர் கோபி கள்ளயில், டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் உள்ளிடோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.
இந்த சந்திப்பின் மூலம் முன்னாள் மாணவர்கள் சார்பாக கல்லூரியில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதில் முக்கியமாக மாணவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கத்தில் கல்லூரி வளாகத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் 150 கோடி மதிப்பீட்டில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. இந்த பூங்காவில் சிறந்த தொழில் முனைவோர்கள் தங்களது ஆராய்ச்சி மையங்களை அமைக்கவுள்ளனர்.
இதில் வேளாண்மை விண்வெளி பசுமை நிதி தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு ஆண்டும் கணினி உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்பட உள்ளது. மாணவர்கள் படிக்கும்போதே அவர்கள் தொழில் முனைவோர்களாக மாற அனைத்து முயற்சிகளும் இதன் வாயிலாக மேற்கொள்ளப்படும்.
மேலும் மாணவர்களின் கல்வி காலம் முழுவதும் அவர்களுக்கு தேவையான நிதியுதவி மற்றும் வழிகாட்டுதல்கள் தொழில் முனைவோர்களாகும் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டு வெளிநாட்டில் கல்வி நிறுவனங்களில் சேரும் என்ஐடி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை அளிக்கும் திட்டம் மேலும் வெளிநாட்டு நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பெறுவதற்கு உதவும் திட்டம் போன்றவைகளும் முன்னாள் மாணவர்களால் செயல்படுத்தப்பட உள்ளது”. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் என்ஐடி இயக்குநர் அகிலா தொடர்ந்து பேசுகையில், தற்போது கல்லூரியில் 31 வகை எம்டெக் படிப்புகளும் 11 வகை வீட்டுப் படிப்புகளும் உள்ளது. இந்த வீட்டு படிப்பில் ஆண்டு தோறும் 1800க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது மாறிவரும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எம்டெக் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் என்ற படிப்பை ஆன்லைனில் அறிமுகப்படுத்த உள்ளோம்” இவ்வாறு தெரிவித்தார்.
NIT Trichy is launching a Rs. 150 crore Research and Innovation Park to foster entrepreneurship among engineering students. Learn about its initiatives, alumni support, and future goals.