நயன்தாராவின் நெட்பிளிக்ஸ் ஆவணப்படமான Nayanthara: Beyond The Fairytale -ல் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் மூன்று வினாடிகளின் கிளிப்பிங்கை பயன்படுத்தி உள்ளனர். இதனால் மிகப்பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ‘நானும் ரவுடி தான்’ பட தயாரிப்பாளர் நடிகர் தனுஷ், காப்புரிமை மீறல் கோரி ரூ. 10 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கறிஞர் கடுமையான எச்சரிக்கை
இது தொடர்பாக நடிகை நயன்தாரா, தனுஷுக்கு எதிராக காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கு பதிலளித்த தனுஷின் வழக்கறிஞர் குழு, நயன்தாராவின் கூற்றுகளை மறுத்துள்ளது. ‘நானும் ரவுடி தான்’ பட காட்சிகள் தயாரிப்பாளரான தனுஷுக்கு சொந்தமானது. அதை படமாக்கிய தனிநபருக்கு அல்ல என்று தெரிவித்துள்ளார். இதனால் நயன்தாராவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளார் வழக்கறிஞர்.
24 மணி நேர காலக்கெடு
ஆவணப்படத்தில் இருக்கும் நானும் ரவுடி தான் படம் தொடர்பான காட்சிகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று தனுஷின் வழக்கறிஞர் தரப்பு தெரிவித்தது. அவ்வாறு நீக்கத் தவறினால் நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் இந்தியா மீது ரூ. 10 கோடி நஷ்டஈடு உட்பட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நயன்தாராவின் நிலைப்பாடு
நயன்தாரா இந்த விவகாரம் தொடர்பாக தனுஷுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். நானும் ரவுடி தான் பட காட்சிகளை பயன்படுத்த இரண்டு வருடங்களாக அனுமதி தராமல் தன்னையும், தனது கணவர் விக்னேஷ் சிவனையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரீமியர்
இந்த பல சிக்கல்களுக்கு மத்தியில், Nayanthara: Beyond The Fairytale ஆவணப்படன் இன்று நவம்பர் 18 ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை, கணவர் விக்னேஷ் சிவனுடனான அவரது உறவு உட்பட பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளது.
Nayanthara’s Netflix documentary Beyond The Fairytale faces a ₹10 crore lawsuit by Dhanush over a behind-the-scenes clip from Naanum Rowdy Dhaan. The legal battle adds drama to the documentary’s November 18 premiere.