புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான விராட் கோலி கார் ஆர்வலருமாகவும் உள்ளார். தொடர்ந்து சொகுசு மற்றும் அதிக செயல்திறன் கொண்ட வாகனங்களை வாங்கி அசத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில், அவர் தனது புதிய லேண்ட் ரோவர் டிஃபென்டர் மற்றும் BMW iX1 EV கார்களிலுடன் வலம் வருகிறார். இது கார்கள் மீதான அவரது மாறுபட்ட ரசனையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் ஆடியின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் கோஹ்லி, தனது கலெக்ஷனில் அதிக கவர்ச்சியான கார்களை சேர்த்து வருகிறார்.
விராட் கோலி குறித்த சமீபத்திய வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில், விமான நிலையத்திற்கு தனது புத்தம் புதிய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவி காரில் விராட் கோலி வந்திறங்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. விராட் கோலியிடம் இருப்பது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 கார் ஆகும். இது 5 கதவுகளை கொண்ட லக்சரி எஸ்யூவி கார் ஆகும்.
டிஃபென்டர் 110 ஆனது 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், பிரீமியம் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஆறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் பிளைண்ட்-ஸ்பாட் அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. ரூ.1.04 கோடியில் இருந்து ரூ.1.57 கோடி வரையில் எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்டுள்ள டிஃபெண்டர் 110 காரில் 2 லிட்டர் பெட்ரோல், 3 லிட்டர் பெட்ரோல், 3 லிட்டர் டீசல் மற்றும் 5 லிட்டர் வி8 பெட்ரோல் என பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சமீபத்தில் பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ்1 என்கிற எலக்ட்ரிக் காரில் காணப்பட்டார். பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 எலக்ட்ரிக் கார் கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கிரே, சில்வர், கருப்பு மற்றும் வெள்ளை என 4 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில், கிரே நிறத்தில் இந்த காரை விராட் கோலி வாங்கியுள்ளார். கடந்த ஆண்டில்தான் இந்திய மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 கார் அறிமுகம் செய்யப்பட்டதால், இந்த காரை விராட் கோலி சமீபத்தில்தான் வாங்கியிருக்கலாம்.
விலையுயர்ந்த எலக்ட்ரிக் காரான பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 காரில் 66.4kWh பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த பேட்டரி பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் மூலமாக 313 எச்பி மற்றும் 494 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் காருக்கு கிடைக்கிறது. இந்த எலக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 440கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.66.90 லட்சமாக உள்ளது.
விராட் கோலி ஓர் லக்சரி கார் பிரியர் ஆவார். அவரிடம் இருக்கும் பணத்திற்கு மாதத்திற்கு ஒரு விலையுயர்ந்த காரை வாங்க முடியும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு கார்களும் விராட் கோலியின் கார்கள் மீதான் ஆர்வத்தை பிரதிபலிக்கின்றன.
Discover Virat Kohli’s latest additions to his car collection in 2024, including the rugged Land Rover Defender and the luxury electric BMW iX1. Learn more about the features, prices, and why these vehicles reflect Kohli’s taste for style and performance.