நோயல் டாடா தலைமையிலான டாடா குழுமம் ஜுடியோ பியூட்டி என்ற புதிய பிராண்டை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் இந்தியாவின் வெகுஜன-சந்தையான அழகு துறையில் நுழைகிறது டாடா குழுமம். தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹிந்துஸ்தான் யூனிலீவரின் எல்லே18, சுகர் காஸ்மெட்டிக்ஸ், ஹெல்த் & க்ளோ, மற்றும் கலர்பார் போன்ற பிராண்டுகளுடன் போட்டியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரிலையன்ஸ், நைக்கா மற்றும் ஷாப்பர்ஸ் ஸ்டாப் போன்ற முக்கிய போட்டியாளர்களிடமிருந்து ஜுடியோ பியூட்டி தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது, இது முக்கியமாக பிரீமியம் மற்றும் சொகுசு பிரிவுகளில் கவனம் செலுத்துகிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ப அழகுப் பொருட்களை விற்பனை செய்வதை நோக்கமாக கொண்டு, ஜுடியோ பியூட்டி தனது முதல் கடையை பெங்களூருவில் திறந்தது. குருகிராம், புனே மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் இதனை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
டாடா குழுமம் அழகு துறையில் ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்தியாவின் முதல் அழகு பிராண்டான Lakme -யை நிறுவியது. பின்னர் அது ஹிந்துஸ்தான் யூனிலீவருக்கு விற்கப்பட்டது. அழகு சில்லறை விற்பனையில் இவர்களின் டாடா க்ளிக் பலேட், ஒரு பிரீமியம் அழகுசாதன தளமாகும். ஜுடியோ பியூட்டி மூலமாக அழகு சந்தையில் மீண்டும் அசைக்க முடியாத இடத்தை பிடிப்பதை டாடா நோக்கமாகக் கொண்டுள்ளது.
Trent இன் நன்கு அறியப்பட்ட பிராண்ட் Zudio FY17 அதன் தொடக்கத்திலிருந்து தொடர் வளர்ச்சியை கண்டது. ஆரம்பத்தில் ஸ்டார் ஸ்டோர்களில் தொடங்கப்பட்டது. ஜுடியோ அதன் தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் 35-40% குறைந்த மொத்த வரம்பு காரணமாக விரைவாக விரிவடைந்தது. இந்த பிராண்ட் ஒரு சதுர அடிக்கு ரூ. 16,300 வருவாய் ஈட்டுகிறது. இது தொழில்துறை சராசரியை விட இருமடங்காகும்.
தற்போது, ஜுடியோ இந்தியா முழுவதும் 559 ஸ்டோர்களை நடத்தி வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் பல போட்டியாளர்களை மிஞ்சம் அளவிற்கு வியாபாரத்தை நடத்தி வருகிறது. இந்த வெற்றி டிரெண்டிற்கு அதன் வெற்றிகரமான சில்லறை விற்பனை மாதிரியை அழகு துறையில் பிரதிபலிக்க ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளது.
Loreal மற்றும் Shiseido போன்ற உலகளாவிய அழகுப் பிராண்டுகளுக்கு இந்தியா முக்கியமான சந்தையாக மாறி வருகிறது. L’Oréal இந்தியாவை தொழில்முறை தயாரிப்புகளுக்கான ஐந்தாவது பெரிய சந்தையாக அடையாளம் கண்டுள்ளது, அதே நேரத்தில் Shiseido தனது பிரீமியம் நர்ஸ் காஸ்மெட்டிக்ஸ் பிராண்டை நாட்டில் அறிமுகப்படுத்த ஷாப்பர்ஸ் ஸ்டாப்புடன் இணைந்துள்ளது.
Redseer Strategy Consultants மற்றும் Peak XV இன் அறிக்கையின்படி, L’Oréal, Mama Earth, Nivea மற்றும் Nykaa போன்ற பிரத்யேக அழகு பிராண்டுகள், தற்போது 33% சந்தைப் பங்கைக் கொண்டிருக்கின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த மதிப்பு 42% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் ப்ராக்டர் & கேம்பிள் போன்ற பாரம்பரிய நிறுவனங்களின் சந்தைப் பங்கு 900 அடிப்படை புள்ளிகள் குறைந்து 2027க்குள் 58% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The Tata Group, led by Noel Tata, enters India’s mass-market beauty sector with Zudio Beauty, targeting budget-conscious consumers and competing against established brands like Hindustan Unilever and Sugar Cosmetics.