ஸ்ட்ரீ 2 இன் வெற்றியைத் தொடர்ந்து ராஜ்குமார் ராவ் தற்போது பிரபலமாக உள்ளார். இப்படம் உலகளவில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இதனால் அவரின் நிகர சொத்து மதிப்பை மேலும் உயர்ந்துள்ளது. ஸ்ரீகாந்த் மற்றும் மிஸ்டர் & மிஸஸ் மஹி போன்ற படங்கள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றதன் மூலம் இந்த ஆண்டு ராவுக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. ஸ்ட்ரீ 2 படத்தின் வெற்றி ராஜ்குமாரின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கை போ சே!, பரேலி கி பர்ஃபி, ஒமெர்டா, ஸ்ட்ரீ, தி ஒயிட் டைகர், மற்றும் மோனிகா, ஓ மை டார்லிங் போன்ற படங்களின் வெற்றிகளால் திரையுலகில் தனக்கென முக்கிய யாடத்தை பிடித்துள்ளார் ராஜ்குமார். 2008 இல் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் பட்டம் பெற்ற பிறகு 2010 இல் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். அவரது முதல் படமான லவ் செக்ஸ் அவுர் தோக்கா படம் வெற்றியடைந்து திரையுலகில் சிறப்பான அறிமுகத்தை ஒடுத்துள்ளது.
ராஜ்குமார் ராவ் தேசிய திரைப்பட விருது மற்றும் ஆசிய பசிபிக் திரை விருது உட்பட பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். அவர் 2017 இல் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பிரபலங்கள் 100 பட்டியலில் இடம்பெற்றார். நடிப்பு ஒருப்பக்கம் இருந்தாலும், பிரபலமான பிராண்ட்களுடனான ஒப்புதல்கள் அவருக்கு குறிப்பிடத்தக்க வருமான பெற்று தருகின்றன. பைனான்சியல் எக்ஸ்பிரஸின் கூற்றுப்படி, ராஜ்குமார் ராவின் நிகர மதிப்பு 81 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. அவர் ஒரு படத்திற்கு சுமார் ரூ. 6 கோடி சம்பளமாக பெறுகிறார்.
மேலும் ஒவ்வொரு பிராண்ட் ஒப்புதல் மூலமாக தோராயமாக 1-2 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். இந்த வெற்றிகள் எல்லாம் ஒருப்பக்கம் இருந்தாலும், பலர் நம்புவது போல் தான் பணக்காரர் அல்ல என்று ராவ் கூறுகிறார். Unfiltered with Samdish என்ற யூடியூப் சேனலில் சமீபத்திய நேர்காணலில், அவர் தனது நிதி பற்றிய தவறான எண்ணங்களை தெளிவுபடுத்தினார்.
அவரது நிகர மதிப்பு 100 கோடி ரூபாய் என்று சிலர் கூறினாலும், அவர் தனது வீட்டிற்கான கணிசமான EMI-யை இன்னும் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். 50 லட்சம் மதிப்பிலான காரை தன்னால் வாங்க முடியும் என்றாலும், அப்படி வாங்குவதற்கு மிகவும் யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ராவ் விளக்கியுள்ளார். சுமார் 20 லட்சம் ரூபாய் விலையுள்ள ஒரு காரை வாங்குவது வசதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒரு நடிகரின் மனநிலையில் திடீர் பணம் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தும் ராவ் கவலை தெரிவித்துள்ளார். பெரிய தொகையை விரைவாகப் பெறுவது ஒருவரின் கண்ணோட்டத்தையும் நடத்தையையும் மாற்றும் என்று ராவ் நம்புகிறார்.
முன்னோக்கிப் பார்க்கும்போது, ராஜ்குமார் ராவின் தொழில் வாழ்க்கை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அவரது சமீபத்திய திட்டம் விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ, இது ராஜ் சாண்டில்யா இயக்கிய செக்ஸ் காமெடி ஆகும். இதில் அவர் திரிப்தி டிம்ரி, விஜய் ராஸ் மற்றும் மல்லிகா ஷெராவத் ஆகியோருடன் நடித்துள்ளார்.
ஸ்ட்ரீ 2 ஐப் பொறுத்தவரை, பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் ₹855.86 கோடி வசூலித்துள்ளது, இந்திய சந்தையில் ₹711.86 கோடியும், சர்வதேச பார்வையாளர்களிடமிருந்து ₹144 கோடியும் வசூலித்துள்ளது. அவரது அபரிமிதமான புகழ் இருந்தபோதிலும், ராஜ்குமார் ராவ் எளிமையாகவே உள்ளார். அவருடைய சொத்துக்கள் தொடர்பான செய்திகள் பொதுக் கருத்தைக் காட்டிலும் மிகவும் எளிமையானது என்பதையும் ராவ் தெளிப்படுத்துகிறார்.
Rajkummar Rao shines after the success of Stree 2, grossing over ₹400 crore globally. With nearly 30 films and a net worth of ₹81 crore, he shares insights on wealth and maintaining humility in the industry.