காஞ்சிபுரத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் ஒன்றாக இருப்பது சாம்சங் தொழிற்சாலை இங்கு 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் சிஐடியு சங்கம் துவங்கப்பட்டது, ஆனால் அந்த சங்கம் துவங்கப்பட்டதற்கான அறிமுக கடிதத்தை சாம்சங் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் எந்த ஒரு பதிலும் வரவில்லை.
மேலும் சாம்சங் தொழிற்சாலையில் ஏசி, பிரிட்ஜ், மற்றும் வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை.
சாம்சங் நிறுவனம் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது, சம்பளம் வழங்கப்படாது, தீபாவளி போனஸ் கிடையாது என பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்து வரும் நிலையிலும் பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் காஞ்சிபுரம் தேரடி பகுதியில் இருந்து சாம்சங் தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர், அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்,
சாம்சங் தொழிலாளர்கள் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி 8 அம்ச கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர், 8 அம்ச கோரிக்கை நிறைவேற்றினால் தான் தங்களுடைய போராட்டம் கைவிடப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்நிலையில் போராட்டம் 26 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது, போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா சாம்சங் நிறுவனம் மேலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்களும் இணைந்து அனைத்து தரப்புக்கும் பயனுள்ள நல்ல முடிவை எடுப்பார்கள் என உறுதியுடன் நம்புகிறேன் எனவும் அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்தார்.
ஆனால், அமைச்சர் டிஆர்பி பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படாமல் தோல்வியடைந்துள்ளது. இதனால் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா, தாமு அன்பரசன், சிவி கணேசன் ஆகியோர் முன்னிலையில் இருதரப்பினர் இடையில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.
பேச்சுவார்த்தை குறித்து சாம்சங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பேசும் போது, எங்கள் ஊழியர்களின் நலனே எங்களுடைய முதன்மையான முன்னுரிமை. நாட்டின் அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு நாங்கள் இணங்குகிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.
எங்கள் தொழிலாளர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி ஊதியம், சலுகைகள் மற்றும் பணி நிலைமைகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். தற்போது, எங்கள் சென்னை தொழிற்சாலையில் உற்பத்தியை சீராக்க முடிந்துள்ளது. எங்கள் நுகர்வோருக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
Samsung’s Sriperumbudur plant faces a strike by 1,100 workers demanding better pay and union recognition. Tamil Nadu government ministers are mediating to resolve the issue and ensure production continuity.