திரைப்படத் துறையில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களின் சம்பளம் தொடர்பான செய்திகளால் அடிக்கடி தலைப்பு நியூஸில் இடம் பிடிக்கின்றனர்.. ஷாருக்கான், சல்மான் கான், அமிதாப் பச்சன், அமீர் கான், அக்ஷய் குமார் மற்றும் பலர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். முன்னதாக திரையுலகில் பாலிவுட் நடிகர்கள் அதிக சம்பளம் வாங்கி வந்தனர். தற்போது தென்னிந்திய நடிகர்களும் அவர்களுக்கு சமமாக சம்பளம் பெற ஆரம்பித்து விட்டனர்.
அப்படிப்பட்ட ஒரு நடிகரைப் பற்றி பேசுகையில், எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பல படங்களில் அவர் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சயின்ஸ் பிக்சன் படம் ரூ 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. அவர் யாருமல்ல பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் தான்.
பிரபாஸ் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் அவரின் சம்பளம் அதிகரித்து கொண்டே செல்கிறது. படத்தின் பட்ஜெட் மற்றும் பிற விஷயங்களை பொறுத்து அவரின் சம்பளம் மாறுபடுகிறது. தொடர்ந்து மாறுபட்ட பாத்திரங்களை ஏற்று, பிரபல தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து வருவதால், அவரின் சம்பளம் உயர்ந்து கொண்டே செல்கிறது.
பிரபாஸ் ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய் வசூலிக்கிறார் என கூறப்படுகிறது. “கல்கி 2898 AD” கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கலாம், ஆனால் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பான் இந்திய ஸ்டாராக பிரபாஸின் இடத்தை இப்படம் மேலும் உறுதிப்படுத்தி உள்ளது.
நாக் அஸ்வின் இயக்கி அண்மையில் வெளியான ‘கல்கி 2898 AD’ மற்றும் சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் 200 முதல் 300 கோடி ரூபாய்க்கு அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டவை. இது அவருக்கு திரையுலகில் இருக்கும் மார்கெட்டை காட்டுகிறது.
அடுத்ததாக இவரது நடிப்பில் ‘தி ராஜா சாப்’ படம் வெளியாக இருக்கிறது. மேலும், ‘கல்கி 2898 AD’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பிளான்களும் உள்ளன. இந்த படங்களின் வெற்றி பிரபாஸின் சம்பளத்தை மேலும் அதிகரிக்கும் என்றால் அது மிகையாகாது.
பாகுபலி படத்தின் மூலம் பான் இந்திய ஸ்டாராக உருவெடுத்தவர் நடிகர் பிரபாஸ். தனது முதல் படத்தில் வெறும் 4 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நிலையில் 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்து தற்போது ஒரு படத்திற்கு ரூ. 100 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். அந்தளவிற்கு இந்தியாவின் முன்னணி நடிகர்களில் பட்டியலில் பிரபாஸ் முக்கிய இடத்தினை பிடித்துள்ளார்.
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் பிரபாஸ். ஒவ்வொரு படத்திலும் அவரின் சம்பளம் அதிகரித்து கொண்டே செல்கிறது. படத்தின் பட்ஜெட் மற்றும் பிற விஷயங்களை பொறுத்து அவரின் சம்பளம் மாறுபடுகிறது. தொடர்ந்து மாறுபட்ட பாத்திரங்களை ஏற்று, பிரபல தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து வருவதால், அவரின் சம்பளம் உயர்ந்து கொண்டே செல்கிறது.
பிரபாஸ் தற்போது ஒரு படத்திற்கு ரூ. 100 கோடி சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ‘கல்கி 2898 AD’ மற்றும் சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் 200 முதல் 300 கோடி ரூபாய்க்கு அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டவை. இது அவருக்கு திரையுலகில் இருக்கும் நிலையான மார்கெட்டை காட்டுகிறது.
Prabhas is leading the way in South Indian cinema, becoming one of the highest-paid actors by charging ₹100 crore per film. Discover how his success and strong fanbase boost his career.