கோலிவுட் திரையுலகில் உச்ச நடிகராக திகழும் தளபதி விஜய், தனது தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் உதவியுடன் திரையுலகில் நுழைந்தார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்து, சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்தாலும், விஜய்யின் படங்களுக்காக ரசிகர்கள் இன்னும் காத்திருக்கின்றனர். விஜய் தற்போது ‘கோட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
விஜய்யின் பொருளாதார வளர்ச்சியும், ஆடம்பரமான வாழ்க்கை முறையும் தான் இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக அவர் வெற்றி பெற்றதற்குக் காரணம். சென்னை, நீலாங்கரை, கேசுவரினா டிரைவ் தெருவில் அமைந்துள்ள விஜய்யின் கடற்கரை பங்களா, டாம் குரூஸின் புகழ்பெற்ற கடற்கரை இல்லத்தை போல் கட்டப்பட்டது.
Housing.com படி, இந்த பங்களா நவீன கட்டிடக்கலை, ஒரு வெள்ளை வெளிப்புறம், அமைதியான கடற்கரை அமைப்பு மற்றும் ஆடம்பரம் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. இந்த வீடு வங்காள விரிகுடாவின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது.
2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, கோலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். அவரது ஆண்டு வருமானம் 150 முதல் 200 கோடி ரூபாய். ஒவ்வொரு படங்களுக்கும் அவரின் சம்பள மதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
சொகுசு வாகனங்கள் மீது விஜய்க்கு எப்போது தனிப்பட்ட காதல் இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் விஜய்யின் கார் லிஸ்டில் அதிக மதிப்பில் முன்னணியில் இருக்கிறது. ரூ.2.5 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் 6.6 லிட்டர் ட்வின் டர்போ, வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 570 பிஎச்பி பவரையும், 780 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
விஜய்யின் கலெக்ஷனில் X5 மற்றும் X6 ஆகிய இரண்டு BMW SUVகள் உள்ளன. விஜய்யின் கைவசம் இருக்கும் மற்றொரு வாகனம் ஆடி ஏ8 எல். 1.17 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த சொகுசு செடானை தான் விஜய் அதிகம் பயன்படுத்துகிறார். இவை தவிர மேலும் பல உயர் ரக கார்களை விஜய் வைத்துள்ளார்.
அவை, ரேஞ்ச் ரோவர் எவோக்: ரூ.65 லட்சம்
ஃபோர்டு மஸ்டாங்: 74 லட்சம் ரூபாய்
வால்வோ XC90: ரூ 87 லட்சம்
Mercedes-Benz GLA: ரூ 87 லட்சம்
விஜய் ஒரு படத்திற்கு 150 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தற்போது நடித்து வரும் கோட் படத்திற்காக அவர் ரூ. 200 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நீலாங்கரை பங்களா வீடு மற்றும் சொகுசு கார்கல ஆகியவற்றுடன் விஜய்யின் நிகர மதிப்பு சுமார் $56 மில்லியன் அதாவது சுமார் ரூ.410 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discover the luxurious lifestyle and impressive net worth of Thalapathy Vijay, a major star in Tamil cinema. Explore his high movie fees, opulent seaside bungalow, and extensive luxury car collection that highlight his success in the film industry.