ஒன்றிய அரசால் 2015-16 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டம். தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்களுக்கான, மாதாந்திர ஓய்வூதிய திட்டமாக திகழும் இதில், ஒருவர் மாதந்தோறும் ரூ. 5000 வரை பென்ஷனாக பெற முடியும். இந்த ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டம் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
பல்வேறு நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஒன்றிய அரசு ‘அடல் பென்ஷன் யோஜனா’ என்ற திட்டத்தை துவங்கியது. இதுவரை 7 கோடிக்கும் அதிகமான நபர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைந்துள்ளனர். வயதானவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்கக்கூடிய உத்தரவாதமான திட்டம் இது.
18 வயது முதல் 40 வயது வரையிலான நபர்கள் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யலாம். 18 வயதான ஒருவர் குறைந்தபட்சமாக மாதம் ரூ.210 இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். தினமும் வெறும் 7 ரூபாய் வீதம் மாதத்திற்கு ரூ. 210 என சேமித்து வந்தாலே போதும். ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் என 60 வயதாகும் போது ஒருவர் ஓய்வூதியமாக இத்திட்டத்தின் வாயிலாக பெற முடியும்.
பிரீமியம் செலுத்துவதை பொறுத்து பென்சன் தொகை அதிகரிக்கும். அதே மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாயை ஓய்வூதியமாக பெறுவதற்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 626 செலுத்த வேண்டும். 6 மாதங்களுக்கு ஒருமுறை முதலீடு செய்ய விரும்பினால், 1,239 ரூபாய் செலுத்த வேண்டும். இதே திட்டத்தில் மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.1,000 பெற விரும்பினால், ஒவ்வொரு மாதமும் 18 வயதில் இருந்து ரூ.42 செலுத்த வேண்டும்.
கணவன், மனைவி இருவரும் சேர்ந்தும் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்தலாம். அதன்பின்னர் 60 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் மூலமாக பலன் கிடைக்கும். PFRDA என்ற அமைப்பால் நிர்வகிக்கப்படும் இத்திட்டத்தில், இறப்பு அல்லது இறுதிக்கட்ட நோய் மற்றும் 60 வயதில் வெளியேறிக் கொள்ளலாம்.
முதலீட்டாளர் திடீரென இறந்து விட்டால், அவரின் வாழ்க்கை துணைக்கு பென்ஷன் தொகை வழங்கப்படும். அல்லது இருவரும் இரண்டு விட்டால், சந்தாதாரரின் நாமினிக்கு அந்த பென்ஷன் தொகை கொடுக்கப்படும்.
பென்ஷனை அதிகரித்துக் கொள்ளும் விதமாக இந்த திட்டத்தில் அதிக தொகையை கட்டும் வசதியும் உள்ளது. மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் வங்கி கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் வசதி மூலம் சந்தா செலுத்தும் வசதியும் இத்திட்டத்தில் உள்ளது.
இதனையடுத்து சந்தாதாரர்கள் முதலீடு செய்த தொகை 100% ஓய்வூதியமாக மாற்றப்பட்டு வழங்கப்படும். அடல் பென்ஷன் திட்டத்தை பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தபால் அலுவலகங்களில் ஆரம்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் வருமான வரி செலுத்துபவர்கள் சேர தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Explore the Atal Pension Yojana (APY), a government-backed pension scheme offering financial security for individuals in the unorganised sector. Learn about its eligibility, contribution structure, advantages, and comparison with other retirement options.