பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ரசிகைகள் கூட்டம் அதிகம். இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக திகழும் ஷாருக்கான், ஒரு படத்துக்கு ரூ. 250 கோடி வாங்குகிறார். இந்நிலையில் தான் தினமும் ஒரு வேளை தான் சாப்பிடுவதாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார். அதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் தனது வாழ்க்கை முறை குறித்து மனம் திறந்து பேசிய ஷாருக்கான், இரவு 2 மணிக்கு வீட்டிற்கு வருவேன். தூங்கச் செல்வதற்கு முன்பு ஒர்க் அவுட் செய்வேன். காலை 5 மணிக்கு தூங்கச் செல்வேன். ஷுட்டிங் இருந்தால் காலை 9 அல்லது 10 மணிக்கு எழுவேன். தினமும் ஒரு வேளை சாப்பிடுவேன். intermittent fasting எல்லாம் இல்லை. அது என்னுடைய விருப்பம்.
அமெரிக்க நடிகர் மார்க் வால்ல்பெர்க் எழுந்தவுடன், நான் தூங்கிவிடுவேன். பிறகு நான் படப்பிடிப்பில் இருந்தால், காலையில் ஒன்பது அல்லது பத்து மணியளவில் எழுந்திருப்பேன். நான் உடற்பயிற்சி செய்து படுக்கைக்குச் செல்வதற்கு முன் குளிக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தினமும் அரை மணி நேரம் மட்டுமே உடற்பயிற்சி செய்கிறார் ஷாருக்கான். மேலும் தனது நான்கு வருட இடைவெளி பற்றி பேசியவர், “55 வயதில், நான் ஓய்வு ஒன்று எடுத்து கொண்டேன். கோவிட் காலத்தில், வேறு எதுவும் செய்ய முடியவில்லை. இத்தாலிய சமையலைக் கற்றேன். அந்த நான்கு ஆண்டுகளில் என்னுடைய உடலை வலுப்படுத்தினேன் என கூறியுள்ளார்.
தனது அடுத்த படம் குறித்து பேசிய ஷாருக்கான், ‘எனக்கு சில வகையான படங்களில் நடிக்க ஆர்வம். 6-7 வருடங்களாக ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். அதை நான் சுஜோயிடம் சொன்னேன். ஒரு நாள் நாங்கள் எங்கள் அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது, என்னிடம் ஒரு கதை சொன்னார். அதுதான் நான் நடிக்கும் அடுத்த படம். அதற்கான வேலைகளைத் துவங்க உள்ளேன் என தெரிவித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கின் மகளும் நடிகையுமான சுஹானா கானும் நடிக்கவுள்ளார்.
Shah Rukh Khan was honored with the Career Leopard at the 77th Locarno Film Festival. He shared insights about his upcoming film ‘King’ and his unique daily routine.