இந்திய ஆட்டோமொபைல் துறையில் விங்ஸ் EV ஆனது ராபின் என்ற ‘எலக்ட்ரிக் மைக்ரோ காரை’ அறிமுகப்படுத்த உள்ளது. இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்யும் வகையிலான குட்டி எலெக்ட்ரிக் கார் ஒன்றை ‘விங்க் EV’ (Wings EV) என்ற பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. தந்தை மகனால் நிறுவப்பட்டது இந்நிறுவனம்.
ராபின் (Robin) என்ற பெயர் கொண்ட இந்த நிறுவனத்தின் மைக்ரோ காரானது, கடந்த ஆண்டு ஐரோப்பாவில் நடைபெற்ற மைக்ரோமொபிலிட்டி நிகழ்வில் சிறந்த காருக்கான விருதையும் அங்கீகாரத்தையும் பெற்றது. இந்த குட்டி எலெக்ட்ரிக் காரின் வெளயீட்டுத் தேதியை தற்போது அறிவித்திருக்கிறது விங்க் EV.
ராபின் என்ற பெயர் கொண்ட இந்த குட்டி எலெக்ட்ரிக் காரை ஒரு கிராஸ்ஓவர் பைக் என்று கூட நாம் சொல்லலாம். ஏனெனில் அப்படித் தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த மைக்ரோ கார். இந்தக் காரின் முன்பக்க டிரைவர் இருக்கை மட்டுமே இருக்கும். பின்பக்கம் ஒரேயொரு நபர் மற்றும் ஒரு குழந்தை அமருக்கும் அளவிற்கு பயணியர் இருக்கை இருக்கும். இந்த காரானது ஒரு பைக்கின் அளவு தான் இருக்கிறது.
நகரங்களில் ஒருவர் அல்லது இருவர் பயன்படுத்துதற்கும் கார்களை எடுப்பதனால் அதிகமாக வாகன நெரிசல் ஏற்படுகிறது. ஆனால், அவர்களுக்கு காரின் சொகுசும் தேவைப்படுகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே இந்த மைக்ரோ எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருக்கிறது விங்ஸ் EV.
e, s, x என மூன்று வேரியன்ட்களில் இந்த எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருக்கிறது விங்ஸ் EV நிறுவனம். e வேரியன்டானது சிங்கிள் சார்ஜில் 65 கிமீ வரை மட்டுமே செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது. s வேரியன்டானது சிங்கிள் சார்ஜில் 90 கிமீ வரையிலும், x வேரியன்டானது சிங்கிள் சார்ஜில் 110 கிமீ வரையிலும் செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது. இந்தக் காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகும் எனக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
இந்த குட்டி எலெக்ட்ரிக் காரின் e வேரியன்டை ரூ.1.99 லட்சம் விலையிலும், s வேரியன்டை ரூ.2.49 லட்சம் விலையிலும், x வேரியன்டை ரூ.2.99 லட்சம் விலையிலும் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது விங்ஸ் EV. இந்தக் காரினை தற்போது ரூ.5,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள முடியும். முன்பதிவு செய்ய அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தை அனுகலாம்.
இந்த குட்டியான மற்றும் க்யூட்டான எலெக்ட்ரிக் காரை எப்போது வெளியிடவிருக்கிறோம் என்பது குறித்த தகவலை இப்போது தான் அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்.. அதாவது 2025 ஏப்ரல் மாதம் இந்த ராபின் மைக்ரோ எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது விங்ஸ் EV.
“இந்தியாவில் ஆண்டுக்கு 18 மில்லியனுக்கும் அதிகமான இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகின்றன. அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில், அதிக எண்ணிக்கையிலான இருசக்கர வாகனம் வாங்குவோர், இரு இருக்கைகள் கொண்ட மைக்ரோ கார்களுக்கு மாறலாம் என பிரணவின் தந்தை பிரகாஷ் தண்டேகர் தெரிவித்துள்ளார்.
Wings EV, an Indore-based startup, is set to revolutionize India’s automobile market with ‘Robin,’ an electric microcar designed for urban commuters. Launching in April 2025, Robin offers a compact, eco-friendly alternative to traditional vehicles, featuring advanced safety and innovative technology.