இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டாரஸ், தமிழ்நாட்டை ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஏற்றுமதி மையமாக மாற்றுவதற்கான திட்டம் வேகமாகச் செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்திக்கும், எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கும் தலைநகரமாக விளங்கும் தமிழ்நாட்டுக்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை திட்டம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் 9000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற உள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக இந்த தொழிற்சாலையில் தான் முழுமையாக உற்பத்தி செய்யப்படும் பிரீமியம் வாகனமாக இருக்கும். மேலும் அடிக்கல் நாட்டும் விழா பின்னர் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் புதிய தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா குழுமத்திற்கு, தமிழ்நாடு அரசு இந்த புதிய தொழிற்சாலை அமைப்பதற்காக ஏற்கனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கத்திற்கு அருகில் 400 ஏக்கர் நிலத்தைக் கொடுத்துள்ளது.
சென்னை-பெங்களூரு தொழில்துறை வழித்தடத்தை இணைக்கும் இந்த திட்டம் ஓசூர் மற்றும் சென்னைக்கு இடையே ஒரு இணைப்பாக இருக்கும். பனப்பாக்கத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழா அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
ஆட்டோமொபைல் துறையில் ஒரு தொழிற்சாலை செயல்படுத்துவதற்கு பொதுவாக 12-18 மாதங்கள் ஆகும். எனவே இந்த திட்டம் 2025 இன் பிற்பகுதி அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பெங்களூரு பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் எல்லையில் உள்ள ஹோஸ்கோட் மற்றும் சென்னை பெருநகரப் பகுதிக்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் இடையேயான பயண நேரத்தை இந்தத் திட்டம் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Tata Motors is set to establish a ₹9,000 crore manufacturing facility for Jaguar Land Rover near Panapakkam, Ranipet district. This state-of-the-art plant will be operational by late 2025 or early 2026, marking a significant milestone as the first to manufacture a premium vehicle entirely in India. Learn more about its strategic location, production plans, supply chain, and role in the Chennai-Bengaluru Industrial Corridor.