Close Menu
    CHANGE LANGUAGE
    What's Hot

    அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.

    30 May 2025

    நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்

    30 May 2025

    ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்

    30 May 2025
    Facebook X (Twitter) Instagram YouTube
    • She Power
    • She Power
    • I AM NOW AI​
    YouTube Facebook Instagram LinkedIn X (Twitter)
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    • Homepage
    • Updates
    • Entrepreneur
    • Interview
    • Women Story
    • Startups
    • Technology
      • Mobile
    • Auto
      • Electric Vehicles
    • More
      • Entertainment
      • Defence
      • Government
      • Events
      • Funding
      • Gaming
      • Middle East
      • Travel
    Change Language
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    Change Language
    Home » சூர்யாவின் ரூ. 70 கோடி மதிப்பிலான புதிய சொகுசு வீடு
    News Update

    சூர்யாவின் ரூ. 70 கோடி மதிப்பிலான புதிய சொகுசு வீடு

    சென்னை மற்றும் மும்பையில் சொந்த வீடுகள் மற்றும் சொகுசு வாகனங்கள் என நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு ஆச்சரியம் அளிக்கிறது.
    Site AdminBy Site Admin31 July 2024Updated:31 July 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Telegram WhatsApp

    தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக திகழ்கிறார் நடிகர் சூர்யா. பெரும்பாலும் தமிழ் படங்களில் நடித்தாலும் உலக அளவில் ரசிகர்களை வைத்துள்ளார் சூர்யா. ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த சூர்யா, தனது கெரியரில் அபாரமான உயரத்தை அடைந்துள்ளார். பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனான இவர், பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

    சினிமா வெற்றி மிகப்பெரிய புகழ் மற்றும் பொருளாதார வளர்ச்சியை சூர்யாவுக்கு கொடுத்தது. இதனால் சொந்த வீடுகள் மற்றும் சொகுசு கார்கள் என நாளுக்கு நாள் அவரின் சொத்துக்ள் பெரியளவில் வளர்ச்சி அடைந்தன. சமீபத்தில், மும்பையில் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை சூர்யா வாங்கியுள்ளதாகவும், தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் அங்கு அவர் குடியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்ஸில் சினிமாவில் கலக்கி வருகிறார். அத்துடன் தனது கணவர் சூர்யாவுக்கு மிகவும் ஆதரவாக இருந்து வருகிறார். சென்னை மற்றும் மும்பையில் உள்ள சூர்யாவின் வீடுகள், சொகுசு வாகனங்கள் என அவரின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ. 350 கோடியை தொடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சூர்யா நடிப்பை தவிர 2டி எண்டர்டெயின்மென்ட் என தனது சொந்த பேனரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இதனால் வரும் ஆண்டுகளில் அவரது நிகர சொத்து மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தனது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள ‘கங்குவா’ படத்திற்காக சூர்யா, 30 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பொறுத்து, வெளியீட்டிற்குப் பிறகு மேலும் அவரின் சம்பளம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவிடம் ரூ.1.38 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ரூ.80 லட்சம் மதிப்புள்ள ஆடி க்யூ7, ரூ.61 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ், ரூ.1.10 கோடி மதிப்புள்ள ஜாகுவார் ஆகிய வாகனங்கள் உள்ளன.

    Kollywood star Suriya relocates to Mumbai with his family, acquiring a Rs 70 crore luxury apartment. The move marks a new chapter in his illustrious career and personal life.

    banner Business News India Investment Tamil Nadu
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp
    Site Admin
    • Website

    Related Posts

    அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.

    30 May 2025

    நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்

    30 May 2025

    ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்

    30 May 2025

    2024 ஆம் ஆண்டில் சீனாவை விட அமெரிக்காவிற்கு இந்தியாவுக்கு அதிக ஐபோன்களை அனுப்பியுள்ளது.

    30 May 2025
    Add A Comment

    Comments are closed.

    Editors Picks
    Top Reviews
    Advertisement
    About Us
    About Us

    Welcome to channeliam.com, the first AI-powered digital newsroom in India that revolutionizes the way news is produced, delivered, and consumed. Our media startup is dedicated to uplifting society by providing accurate, reliable and unbiased information.

    Subscribe to Updates

    Get the latest creative news about entrepreneurs, startups, and businesses.

    Updates
    • அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.
    • நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்
    • ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்
    • 2024 ஆம் ஆண்டில் சீனாவை விட அமெரிக்காவிற்கு இந்தியாவுக்கு அதிக ஐபோன்களை அனுப்பியுள்ளது.
    • 2026 ஆம் ஆண்டுக்குள் RCPL 60-70% சந்தைப் பங்கை இலக்காகக் கொண்டுள்ளது
    YouTube Facebook Instagram X (Twitter) Pinterest RSS
    © 2025 Likes and Shares Pvt Ltd. Powered By arbaneo

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Change Language
    Malayalam
    English
    Hindi
    Change Language
    Malayalam
    English
    Hindi