எளிமையான தொடக்கத்திலிருந்து பல கோடி நிறுவனங்களின் உரிமையாளர்களாக உயர்ந்த தனிநபர்களின் எண்ணற்ற வெற்றிக் கதைகள் இந்தியாவில் உள்ளது. அந்த வகையில் கோபால் ஸ்நாக்ஸ் லிமிடெட்டின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பிபின் ஹத்வானி, வணிக உலகில் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எளிமையான துவக்கத்தில் இருந்து வெற்றி படிக்கட்டை தொட்ட அவரது பயணம் பலருக்கும் பெரும் ஊக்கம்.
ஹத்வானி வளரும்போது, அவரது தந்தை கிராமத்தில் உள்ள சிறிய கடையில் இருந்து நடத்தும் வணிகத்தின் மீது எப்போதும் ஆர்வமாக இருந்தார். ஹத்வானியின் தந்தை வாயில் நீர் ஊற வைக்கும் குஜராத்தி தின்பண்டங்களைச் செய்து, பின்னர் சைக்கிளில் கிராமங்கள் வழியாகச் சென்று விற்பனை செய்பவர்.
அவருக்கு பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும் உதவுவது ஹத்வானியின் வழக்கம்.
தனது தந்தையுடன் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்ற பிறகு, 1990 இல் தன்னுடைய தொழில் பயணத்தைத் துவங்கினார். தந்தையின் 4,500 ரூபாயைப் பயன்படுத்தி ஒரு சிற்றுண்டி வணிகத்தை ஆரம்பித்தார் ஹத்வானி. தொடங்கினார். பார்ட்னர்ஷிப்பில் தொழில் துவங்கியவர், நான்கு வருடங்களுக்கு பிறகு தனது வணிக கூட்டாளருடன் இருந்து பிரிந்தார். முந்தைய கூட்டு முயற்சியில் இருந்து கிடைத்த ரூ.2.5 லட்சத்தைப் பயன்படுத்தி, தொழில்துறையில் தன்னுடைய தனிப்பட்ட பயணத்தை துவங்கினார்.
1994 இல், ஹத்வானி ஒரு வீட்டை வாங்கினார். தனது மனைவியின் ஆதரவுடன், தக்சா தனது சொந்த தொழிலான கோபால் ஸ்நாக்ஸ் தொடங்கினார். இருவரும் சேர்ந்து பாரம்பரிய தின்பண்டங்களை வீட்டில் இருந்து தயாரிக்க ஆரம்பித்தனர். ஹத்வானி ராஜ்கோட்டின் தெருக்களில் டீலர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்களுடன் தொடர்பு கொண்டு தொழிலை நடத்தி வந்தார். இதனால் உள்ளூர் சந்தையைப் பற்றிய ஆழமான புரிதல் அவருக்கு கிடைத்தது.
ஹத்வானியின் இடைவிடாத முயற்சியால், அவர்கள் தயாரிப்புகளின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது. நுகர்வோர் தேவையின் நிலையான அதிகரிப்புடன், அவர் ஒரு தொழிற்சாலையை நிறுவ நகரத்திற்கு வெளியே முதலீடு செய்தார். தொலைதூர பகுதியில் ஆலை அமைந்திருந்ததால், அதை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர், ஹத்வானி கடனைப் பெற்று நகருக்குள் ஒரு சிறிய யூனிட்டை நிறுவினார். நீண்ட காலமாக, இந்த புதிய ஆலை ஹத்வானியின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டதால் அவருக்கு ஒரு கேம் சேஞ்சர் ஆனது.
இன்று, கோபால் ஸ்நாக்ஸ் இந்தியாவில் சந்தைப் பங்கின் அடிப்படையில் தரமான சுவையான ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவில் நான்காவது பெரிய பிராண்டாகவும், 2023 நிதியாண்டில் நாட்டின் மிகப்பெரிய கத்தியா மற்றும் சிற்றுண்டித் துகள்களின் உற்பத்தியாளராகவும் உள்ளது. தற்போது, கோபால் ஸ்நாக்ஸ் ரூ.40.96 பில்லியன் (ரூ. 4096 கோடி) சந்தை மூலதனத்தைப் பெற்றுள்ளது.
Discover Bipin Hadvani’s inspiring entrepreneurial journey from a small village to leading Gopal Snacks Limited, a multi-crore enterprise in India’s snack industry.