Perplexity AI இன் இணை நிறுவனரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், M3M ஹுருண் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் 2025 ஆம் ஆண்டு இளைய கோடீஸ்வரராக வரலாறு படைத்துள்ளார். 31 வயதான, சென்னையில் பிறந்த தொழில்முனைவோரான இவர் ரூ. 21,190 கோடி தனிப்பட்ட நிகர மதிப்புடன் இந்த இடத்தை பிடித்திருக்கிறார். உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் போட்டியிடும் அவரது AI-இயங்கும் தளமான Perplexity, அவரை சர்வதேச அங்கீகாரத்திற்குத் தள்ளியுள்ளது. Zepto நிறுவனர்கள் Kaivalya Vohra (22) மற்றும் Aadit Palicha (23) உள்ளிட்ட பட்டியலில் உள்ள மற்ற இளம் பணக்காரர்கள் பட்டியலில் ஸ்ரீனிவாஸ் இணைந்துள்ளார்.
இந்தியாவின் பில்லியனர்கள்
இந்தியாவில் இப்போது சாதனை அளவில் 358 பில்லியனர்கள் உள்ளனர். அறிக்கையின்படி, 1,687 நபர்கள் ரூ. 1,000 கோடிக்கு மேல் நிகர மதிப்புள்ளவர்கள். ஒட்டுமொத்தமாக, அவர்களின் சொத்து மதிப்பு ரூ. 167 லட்சம் கோடி – இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதி. சராசரியாக, நாட்டின் செல்வந்தர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் தினமும் ரூ. 1,991 கோடியைச் சேர்த்துள்ளனர். இது ஒவ்வொரு வாரமும் தோராயமாக ஒரு புதிய பில்லியனரை உருவாக்குகிறது.
பட்டியலில் முதலிடம்
ரூ. 9.55 லட்சம் கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி மீண்டும் இந்தியாவின் பணக்காரர் பட்டத்தை வென்றார். அவரை தொடர்ந்து ரூ. 8.15 லட்சம் கோடி சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். HCL இன் ரோஷ்னி நாடார். மல்ஹோத்ரா ரூ. 2.84 லட்சம் கோடி சொத்துக்களுடன் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைந்து வரலாறு படைத்தார். இந்தியாவின் பணக்கார பெண்மணி மற்றும் முதல் 10 பேரில் இளையவர் என்ற பெருமையையும் பெற்றார்.
சுயமாக வளர்ந்தவர்கள்
ஹுருன் இந்தியா பணக்காரர்களின் பட்டியலில் குறிப்பிடத்தக்க 66% பேர் சுயமாக வளர்ந்த தனிநபர்களைக் கொண்டுள்ளனர். மேலும் 74% புதியவர்கள் தங்கள் செல்வத்தை புதிதாக உருவாக்கியுள்ளர். இது நாட்டில் வளர்ந்து வரும் தொழில்முனைவோர் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுகிறது.
நட்சத்திரங்கள், நகரங்கள் மற்றும் துறைகள்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ரூ. 12,490 கோடி சொத்துக்களுடன் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். மும்பை 451 பில்லியனர்களுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. அதைத் தொடர்ந்து புது டெல்லி (223) மற்றும் பெங்களூரு (116) பில்லினியர்களை கொண்டுள்ளன. செல்வத்தை உருவாக்கும் முக்கிய துறைகளில் மருந்து, தொழில்துறை பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும். அதே நேரத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் பயோடெக் வலுவாக வளர்ந்து வருகின்றன.
perplexity AI co-founder aravind srinivas (31) is india’s youngest billionaire on the M3M hurun india rich list 2025 with a net worth of Rs. 21,190 crore.