தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒரு காலத்தில் பரிச்சயமான முகமாக இருந்த எச்.எஸ். கீர்த்தனா, நடிப்பிலிருந்து இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்) அதிகாரியாக மாறியுள்ளார். நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தன்னுடைய தந்தையின் கனவைப் பின்பற்றி, சினிமாவில் இருந்து விலகி, சிவில் சர்வீஸ் துறையில் தனது பணியை துவங்கியுள்ளார்.
ஆரம்பகால நடிப்பு வாழ்க்கை
கீர்த்தனா மிக இளம் வயதிலேயே நடிக்கத் தொடங்கினார். 32க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் 48 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தார். கற்பூரத கோம்பே, கங்கா-யமுனா, உபேந்திரா, லேடி கமிஷனர் மற்றும் சிம்ஹாத்ரி ஆகியவை இவரது நடிப்பில் பிரபலமானாவை. தமிழில் 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்தார். அவரது நடிப்பிற்காக பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றார்.
துணிச்சலான முடிவு
15 வயதில், கீர்த்தனா கல்வியில் கவனம் செலுத்துவதற்காக சினிமாவில் வெற்றியின் உச்சத்தில் இருந்த போதே, நடிப்பிலிருந்து விலக முடிவெடுத்தார். இந்த முடிவு சிவில் சர்வீஸ் நோக்கிய அவரது பயணத்தின் துவக்கத்திற்கு அடித்தளமான அமைந்தது.
சிவில் சர்வீசஸ் பயணம்
இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பவது ஒரு சவாலான பயணம். இதில் கீர்த்தனாவும் பல பின்னடைவுகளைச் சந்தித்தார். ஆறு முறை முயற்சிகள் எடுத்து இறுதியாக வெற்றி எனும் இலக்கை அடைந்தார். 2011 ஆம் ஆண்டில், அவர் கர்நாடக நிர்வாக சேவைகள் (கேஏஎஸ்) தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகள் கேஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். இதனையடுத்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அவரது உறுதியை வலுப்படுத்தியது.
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
2019 ஆம் ஆண்டில், கீர்த்தனா யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் 167 என்ற அகில இந்திய தரவரிசை (ஏஐஆர்) பெற்றார். எழுத்துத் தேர்வில் 794 மதிப்பெண்களும், ஆளுமைத் தேர்வில் 190 மதிப்பெண்களும் பெற்று மொத்தம் 984 மதிப்பெண்களைப் பெற்று வெற்றியாளர் ஆனார்.
தற்போதைய நிலை
கீர்த்தனா இன்று, ஐஏஎஸ் அதிகாரியாக கர்நாடகாவின் சிக்கமகளூர் மாவட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார். வெள்ளித்திரையிலிருந்து பொது சேவைக்கான அவரது பயணம் விடாமுயற்சியும், உறுதியும் இருந்தால் வெற்றி சாத்தியமாகும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
Discover the inspiring journey of HS Keerthana, a former actress who left her film career to become an Indian Administrative Service (IAS) officer.