சாரா என்ற லாப்ரடோர் நாய்க்குட்டி, ராஷி நரங் பெற்ற பிறந்தநாள் பரிசு.
அனைத்து செல்லப் பெற்றோரைப் போலவே, ராஷியும் சாராவுக்கு நல்ல தரமான லீஷ், காலர், படுக்கை, நல்ல உணவு மற்றும் விளையாட்டுப் பொருட்களையும் கொடுக்க விரும்பினார்.
ஆனால் சிந்தித்து பார்த்தால் தற்போதுள்ள கடைகள் எந்த வகையில் அடிப்படை தயாரிப்புகளை வழங்குகின்றன?
உணவுப் பொருட்களில் கூட கலப்படம் செய்யப்பட்டது தான் இன்று விற்கப்படுகிறது.
சோர்ந்து போன ராஷி தன் நாய்க்காக எல்லாவற்றையும் தானே வடிவமைக்க ஆரம்பித்தாள்.
இந்த சிந்தனை ராஷி 2008 இல் ஹெட்ஸ் அப் ஃபார் டெயில்ஸ் (HUFT) என்ற தனது ஸ்டார்ட்அப்பைத் தொடங்க வழிவகுத்தது.
முதலில் படுக்கை, ஜாக்கெட், பாய், உணவு கிண்ணம் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு தீங்கு விளைவிக்காத லீஷ் போன்ற பொருட்களை ராஷி உருவாக்க ஆரம்பித்தார்.
ஆனால் அவர் சில்லறை விற்பனையாளர்களை அணுகியபோது, எல்லோரும் அவரது தயாரிப்பை எடுக்க மறுத்துவிட்டனர்.
தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளின் போது தனது தயாரிப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தினால் பலன் கிட்டும் என்று முடிவெடுத்து தனது தயாரிப்புகளை வெளிப்படுத்தினார் ராஷி.
அந்த கண்காட்சியில் அவர் பெற்ற நேர்மறையான கருத்து அவருடைய திருப்புமுனையாக மாறியது.
இது டெல்லியில் உள்ள செலக்ட் சிட்டி வாக் மாலில் கியோஸ்க் அமைக்க ரூ.5 லட்சத்தை முதலீடு செய்ய ராஷியை தூண்டியது.
செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை பராமரிக்க எந்த தொகையையும் செலவழிக்க தயாராக இருந்ததால், ராஷியின் முயற்சி வெற்றியடைந்தது.
ராஷி வாடிக்கையாளர்களுக்காக எலும்பியல் படுக்கைகள்(Orthopaedic beds) மற்றும் உணவுக்காக காக்கர் கிண்ணங்கள் போன்ற தனிப்பயனாக்கப்பட்ட அதாவது கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட தயாரிப்புகளை உருவாக்கினார்.
செல்லப்பிராணி உரிமையாளராக தனது சொந்த அனுபவங்களிலிருந்து உத்வேகம் பெற்று, ராஷி ஹார்மோன் இல்லாத மற்றும் ஆன்டிபயாடிக் இல்லாத நாய் விருந்துகளை செய்தார்.
இன்று, HUFT ஒன்பது நகரங்களில் 20 நாய் ஸ்பாக்களைக் கொண்டுள்ளது.
அதன் 41 கடைகள் மூலம் 5,000 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.
2018 நிதியாண்டில் HUFT மொத்த வருமானம் 12 கோடி ரூபாய்.
இது 2019ல் ரூ.25 கோடியாகவும், 2020ல் ரூ.48 கோடியாகவும் உயர்ந்தது.
2021 நிதியாண்டில் 75 சதவீத வளர்ச்சி பதிவு செய்யப்பட்டது.
மேலும் HUFT 55 புதிய கடைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டில், வார இறுதி நாட்களில் மட்டும் கியோஸ்க் திறக்க அனுமதி கோரி டெல்லியின் செலக்ட் சிட்டி வாக் மாலை அணுகினார் ராஷி.
அப்போது அவரது கோரிக்கையை ஏற்க மால் உரிமையாளர்கள் தயக்கம் காட்டினர்.
இப்போது, வணிக வளாகங்கள் கியோஸ்க் திறக்க ராஷியின் பின்னால் அணிவகுத்து வருகின்றன.
200 முறை நிராகரிக்கப்பட்ட தயாரிப்புகள், இப்போது ஒரு பெரிய வணிகமாக மாறியுள்ளது.
இதுவே தொழில்முனைவோர்களின் தாரக மந்திரம்.
Also Read Related To : HUFT | Business | Entrepreneurs |
HUFT march towards the 50 crore club with a pet dog.