தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் பிறந்த கிரீஷ் மாத்ருபூதம் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ(MBA) மார்க்கெட்டிங் பட்டத்தை பெற்றார்.
தனது பயணத்தை எச்சிஎல்(HCL) நிறுவனத்தில் தொடங்கி அதன் ஒரு பகுதியாக அமெரிக்கா சென்ற கிரீஷ், 2001ஆம் ஆண்டு சோஹோ(Zoho) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக இந்தியா திரும்பினார்.
இரு ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பு மேலாண்மையின் துணைத் தலைவரானார் கிரிஷ்.
ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சோஹோவை விட்டு வெளியேறிய கிரிஷ், 2010ஆம் ஆண்டு தனது நண்பர் ஷான் கிருஷ்ணசாமியுடன் இணைந்து சாஸ் ஸ்டார்ட்அப்(SaaS Startup) ‘ஃப்ரெஷ்டெஸ்க்’(Freshdesk) என்ற நிறுவனத்தை நிறுவினார்.
சென்னையில் சுமார் 700 சதுர அடி கிடங்கில் தொடங்கிய இந்த நிறுவனத்தின் நோக்கம் வணிக மென்பொருள் தீர்வை வழங்குவதே ஆகும். எஸ்இஓ(SEO), ஆட்வேர்ட்ஸ்(Adwords), டைரக்ட்ரிகள்(Directories), வலைப்பதிவுகள்(Blogs) போன்ற மென்பொருள் ஆதரவு இந்த நிறுவனத்தில் வழங்கப்பட்டது. மேலும் முக்கிய கவனம் மார்க்கெட்டிங்கில் செலுத்தப்பட்டதால் இவரது பிராண்ட் மிகுந்த வளர்ச்சி கண்டது.
2017ம் ஆண்டு ஃப்ரெஷ்டெஸ்க்(பிரேஷ்ட்ஸ்க்) என்ற பிராண்ட் ‛ஃப்ரெஷ்வொர்க்ஸ்(Freshworks)’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஆக்ஸெல்(Accel), டைகர் குளோபல்(Tiger Global), கேப்பிட்டல் ஜி(CapitalG), சீக்வோயா கேப்பிட்டல் இந்தியா(Sequoia Capital India) போன்றவற்றின் ஆதரவை கொண்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் நாஸ்டாக்கில்(NASDAQ) பட்டியலிடப்பட்டு, 13 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை பெற்றது. வெற்றிகரமாக 500 ஊழியர்கள் கோடீஸ்வரர்களாக மாறினர். அவர்களில் 70 பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது வியக்கத்தக்கது. அனைத்து ஊழியர்களும் பிஎம்டபிள்யூ(BMW) கார் உரிமையாளர்களாக மாறக்கூடிய கனவு நிஜமானது.
இந்த வெற்றிக்கு காரணம் வாடிக்கையாளர்களையும் சந்தையையும் சரியாக புரிந்து கொண்டு அதன்படி பணிபுரிந்ததே ஆகும். இத்தகைய வெற்றி பெற்ற கிரீஷ் ஒரு ஸ்போர்ட்ஸ் ரசிகராவார்.
அதிலும் கால்பந்து அவருக்கு பிடித்த விளையாட்டு. சென்னையில் ஒரு கால்பந்து கிளப் வைத்துள்ளார் கிரீஷ். திறமையான கால்பந்து வீரர்களுக்கு உதவித்தொகையும் வழங்கி வருகிறார்.
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் மகன் கிரீஷ், ஒரு ரஜினி ரசிகர்.
Also Read Related To : Freshworks | Krish Mathrubooth | Entrepreneurs |
FreshWorks CEO Krish Mathrubooth’s journey to success.