Gurugram சார்ந்த தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு பிராண்ட்
உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற பொருட்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியைத் தொடங்குவது எப்படி என்பதற்கு பொருள் தான் “The Moms Co”. பிராண்டின் பின்னால் உள்ள வணிக ஜோடிகளான மலிகா தத் சதானி மற்றும் மோஹித் சதானியின் கதை இதோ..
MBA பட்டதாரிகள் தங்கள் குழந்தையின் தோல் பிரச்சனைகளுக்கு இயற்கையான மற்றும் இரசாயனங்கள் இல்லாத பொருட்கள் தேவை என்பதை உணர்ந்த பிறகு “The Moms Co” என்ற யோசனையை தீட்டினர். Moms Co என்பது 2016 இல் நிறுவப்பட்ட ஒரு தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு பிராண்டாகும். இது குருகிராமில் உள்ளது.
2010 ஆம் ஆண்டு, மூன்று மாத கர்ப்பிணியான மலிகா, தனது கணவர் மோஹித்துடன் லண்டன் சென்றார். 2012 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு ஒரு வயது குழந்தையுடன் திரும்பிய பிறகு, லண்டனில் இருந்த குழந்தை பராமரிப்பு பொருட்களை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. பொருட்களை வழங்குவதற்கு கணவரின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களை நம்பியிருக்க வேண்டியதாயிற்று. Moisturizing Lotion, diapers மற்றும் wipes உட்பட அனைத்தும் இந்த வழியிலேயே விநியோகிக்கப்பட்டன.
இது நடைமுறை தீர்வு இல்லாததால், மெதுவாக இந்திய பிராண்டுகளுக்கு மாறினர். ஒரு குறிப்பிட்ட பிராண்டின் லோஷனால் தங்கள் குழந்தைக்கு ‘eczema dermatitis’ என்ற தோல் நிலை வந்ததை உணர்ந்த தம்பதிகள் புதிய வழிகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினர். குழந்தைகளுக்கான இயற்கை தயாரிப்புகளின் யோசனை அவர்களின் தொடக்கத்திற்கு வழிவகுத்தது.
ஏழு மாதங்களில் முதல் தயாரிப்பு
தங்கள் குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் பொருட்களை தயாரிப்பதில் முக்கியத்துவம் கொண்டுள்ளதாக மலிகா கூறுகிறார். இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்தின் விஞ்ஞானிகளை சிறந்த தோல் பராமரிப்பு தயாரிப்புகளை உருவாக்க Moms Co நிறுவனம் அழைத்துச் சென்றது. தொடர்ச்சியான ஆராய்ச்சிக்குப் பிறகு, நிறுவனம் தனது முதல் தயாரிப்பை ஏழு மாதங்களில் அறிமுகப்படுத்தியது. Moms நிறுவனம், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான தோல் பராமரிப்புப் பொருட்கள் உட்பட 31 வகையான தயாரிப்புகளை வழங்குகிறது. நிறுவனம் ஸ்ட்ரெச் மார்க் கிரீம், தாய்ப்பால் தயாரிப்புகள், Morning sickness தயாரிப்புகள், மகப்பேறு மற்றும் மகப்பேற்றுக்கு பிறகான பராமரிப்பு தயாரிப்புகளையும் உற்பத்தி செய்கிறது.
மாம்ஸ் கோ நிறுவனம்
ரூ.100 கோடி டர்ன்ஓவர் செய்துள்ளது
தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் நாட்டில் தரமான தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதை Moms Co நோக்கமாகக் கொண்டுள்ளது. ரூ.15 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட குழந்தை பராமரிப்பு பொருட்கள் ஸ்டார்ட்அப், நான்காவது ஆண்டில்
ரூ.100 கோடி வர்த்தகத்தை எட்டியது. இந்த நிறுவனத்திற்கு மும்பை, பெங்களூரு, டெல்லி மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் கிடங்குகள் உள்ளன. தங்களின் தயாரிப்புகள் தற்போது வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இணையாக மதிப்பிடப்பட்டிருப்பது எனக்கு மிகப்பெரிய திருப்தியாக உள்ளது என்று மலிகா கூறுகிறார். விற்பனையில் 45 சதவீதம் Tier II அல்லது Tier III நகரங்களில் இருந்து வருகிறது. இந்த ஜோடியின் கூற்றுப்படி, தயாரிப்பின் வெற்றி என்னவென்றால், அவர்கள் தங்கள் தயாரிப்புகளை சர்வதேச தரத்துடன் நியாயமான விலையில் விற்பனை செய்வதே ஆகும்.
Also Read Related To : MOMS Co | Women Power | Malika Dutt |
Moms Co provides care for babies and mothers!