அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனையை நிறுத்திய ஓராண்டுக்குப் பிறகு, ஆவின் பிராண்டின் கீழ் 1,000 மில்லி மற்றும் 500 மில்லி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஆவின் பால் கமிஷனரும் நிர்வாக இயக்குநருமான என் சுப்பையன், “ஆவின் பால் பண்ணைகள் அருகே அல்லது ஆவின் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் குடிநீர் பாட்டில் ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
சோழிங்கநல்லூர், அம்பத்தூர், மாதவரம் ஆகிய இடங்களில் ஆவின் மூன்று பால்பண்ணைகளும், அம்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் பால் பொருட்கள் உற்பத்தி யூனிடகளும் உள்ளன.

தண்ணீர் பாட்டில் ஆலைகளை அமைக்க, பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் நீரின் தரம் சோதிக்கப்பட்டு வருவதாக ஆவின் வட்டாரங்கள் தெரிவித்தன.
தண்ணீர் பாட்டில்கள் எவ்வளவு தயாரிக்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பேருந்து நிலையங்களில் உள்ள ஆவின் விற்பனை நிலையங்களிலும், பொது இடங்களில் உள்ள தற்காலிக பார்லர்களிலும் பாட்டில்கள் விற்பனை செய்யப்படலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Also Read Related To : Aavin | Tamil Nadu | Business News |
Tamil Nadu is bringing Aavin water bottles.
