இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 91 சதவீதத்திற்கும் அதிகமானவை குடும்பத்திற்கு சொந்தமானவை அல்லது கட்டுப்பாட்டில் உள்ளவை என்று இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) தலைவர் ஆர்.தினேஷ் தெரிவித்தார்.
இந்த ஆண்டு, CII-FBN இந்தியா குடும்ப வணிக உச்சிமாநாடு “புதிய யுகத்தில் எதிர்காலத் தயாராக இருக்கும் குடும்ப வணிகங்கள்” என்ற தலைப்பில் செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.
“இந்த உச்சிமாநாட்டில் நாங்கள் கவனம் செலுத்த முயற்சிப்பது, இந்தியா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள குடும்பங்களை ஒன்று சேர்ப்பதாகும் .
உச்சிமாநாட்டின் போது பல குடும்ப வழக்கு ஆய்வுகள் விரிவாக விளக்கப்படும் என்றுக் கூறினார்.
“குடும்ப வணிகங்கள் உலகளாவிய தொழிலாளர்களின் 60 சதவீத வேலைவாய்ப்பை வழங்குகின்றன.
மேலும் அவை உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70 சதவீதத்திற்கு பங்களிக்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.
Also Read Related To : CII | Chennai | Industry |
CII to host Family Business Summit in Chennai.