பிரதமர் நரேந்திர மோடி, உலகின் முதல் 2G பயோ எத்தனால் ஆலையைத் திறந்து வைத்துள்ளார். அசாமின் கோலாகாட்டில் உள்ள நுமாலிகார் சுத்திகரிப்பு நிறுவனத்தில் (NRL) 360 KTPA பாலிப்ரொப்பிலீன் (PP) ஆலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்தத் திட்டங்கள் சுத்தமான ஆற்றலை ஊக்குவித்தல், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் மற்றும் அசாமின் தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.
முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பம்
பயோ எத்தனால் ஆலை ரூ. 5,000 கோடி முதலீட்ட்டில் துவங்கப்பள்ளது. அதே நேரத்தில் 2028 ஆம் ஆண்டில் இந்த ஆலையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பாலிப்ரொப்பிலீன் மதிப்பு ரூ. 7,000 கோடியை உள்ளடக்கும். எத்தனால் வசதி ஃபின்னிஷ் கெம்போலிஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. மேலும் பாலிப்ரொப்பிலீன் ஆலை லம்மஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளது.

உற்பத்தி மற்றும் பொருளாதார தாக்கம்
பாலப்ரொப்பிலீன் ஆலைக்கு ஆண்டுதோறும் 5,00,000 டன் மூங்கில்கள் தேவைப்படும் மற்றும் 50 TMT எத்தனால், 19 TMT ஃபர்ஃபுரல் மற்றும் 11 TMT அசிட்டிக் அமிலத்தை உற்பத்தி செய்யும். ABEPL ஃபர்ஃபுரல் மற்றும் அசிட்டிக் அமிலத்திற்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இந்த பயோ எத்தனால் ஆலை பானத் தொழிலுக்கு உணவு தர CO2 ஐ வழங்கும். 25 மெகாவாட் பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்யும். மேலும் மருதத்துவ API துறையை கணிசமாக ஆதரிக்கும்.
விவசாயிகளையும் உள்ளூர் பொருளாதாரத்தையும் மேம்படுத்துதல்
மூங்கில் சாகுபடியால் உள்ளூர் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், அரசாங்கம் நிலையான விநியோகத்தை உறுதிசெய்து சிறிய மூங்கில் சிப்பிங் அலகுகளை நிறுவுவதை உறுதி செய்வதாகவும் மோடி எடுத்துரைத்தார். இந்தத் துறையில் ஆண்டுதோறும் சுமார் ரூ. 200 கோடி செலவிடப்படும். இதன் மூலமாக ஆயிரக்கணக்கான மக்கள் நேரடியாக பயனைடைவார்கள்.
உள்ளூர் வருமானம்
இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா வரலாற்று ரீதியாக சார்ந்திருப்பதை வலியுறுத்திய மோடி, நாடு இப்போது எரிசக்தி சுயசார்பை நோக்கி நகர்கிறது என்று கூறினார். இது போன்ற திட்டங்கள் அசாமின் எரிசக்தி திறன்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தேசிய வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், உள்ளூர் வருமானத்தை அதிகரிப்பதற்கும் பங்களிக்கின்றன எனவும் அவர் எடுத்துரைத்தார்.
உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சி அதிகரிப்பு
இந்த பாலிப்ரொப்பிலீன் ஆலை, ‘மேக் இன் அஸ்ஸாம்’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிகளை வலுப்படுத்தும் என்றும், உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்கள் அசாமின் வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்துவதாகவும், மாநிலத்தை வர்த்தகம் மற்றும் சுற்றுலாவின் மையமாக நிலைநிறுத்தும் எனவும் மோடி விவரித்தார்.
வாழ்த்து தெரிவித்த மோடி
இந்த நிகழ்வில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஒன்றிய அமைச்சர்கள் சர்பானந்த சோனோவால் மற்றும் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் ஈடுபட்ட அனைவருக்கும் மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதோடு வளர்ந்த அசாம் மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான முன்னெடுப்பு இத்திட்டம் என்பதையும் உறுதிப்படுத்தினார்.