1312 முதல் 1337 வரை மாலி பேரரசை மான்சா மூசா ஆட்சி செய்தார். அதன் செல்வம், கலாச்சாரம் மற்றும் பிராந்திய வளர்ச்சியின் பொற்காலம் அவரது ஆட்சியில் நிகழ்ந்தது. வரலாற்றின் மிகப் பெரிய பணக்காரர் என்று அறியப்பட்ட அவர், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அதிகார மையமாக மாலியை மாற்றினார்.
செல்வங்களின் பேரரசு
மான்சா மூசாவின் கீழ் மாலியில் இன்றைய செனகல், காம்பியா, கினியா, புர்கினா பாசோ, நைஜர், நைஜீரியா, சாட், மவுரித்தேனியா மற்றும் மாலி ஆகியவை அடங்கும். அதன் செல்வம் தங்கம், உப்பு, தந்தம் மற்றும் செழிப்பான டிரான்ஸ்-சஹாரா வர்த்தக பாதைகளிலிருந்து வந்தது. மான்சா மூசா வர்த்தகத்தை விரிவுபடுத்தினார். டிம்பக்டு மற்றும் காவோ போன்ற நகரங்களை கலாச்சாரம் மற்றும் கற்றல் மையங்களாக உயர்த்தினார்.
மான்சா அபுபக்கர் II கடலில் மறைந்த பிறகு மூசா அரியணையைப் பெற்றார். ஏற்கனவே செல்வந்தராக இருந்தபோதிலும், மூசாவின் தலைமை ஆப்பிரிக்காவின் பணக்கார ராஜ்யமாக மாலியை மாற்றியது.
1324 ஆம் ஆண்டு புகழ்பெற்ற யாத்திரை (ஹஜ்)
1324 ஆம் ஆண்டில், மான்சா மூசா ஒரு பிரமிக்க வைக்கும் பயணக் குழுவுடன் மெக்காவிற்குப் பயணம் செய்தார். 60,000 ஆண்கள், 12,000 அடிமைப்படுத்தப்பட்ட உதவியாளர்கள், ஒவ்வொன்றும் 300 பவுண்டுகள் தங்கத்தை சுமந்து செல்லும் 80 ஒட்டகங்கள் ஆகியவற்றுடன் மெக்காவிற்கு பயணப்பட்டார். கெய்ரோவில் அவரது தாராள மனப்பான்மை பொருளாதாரத்தை மூழ்கடித்தது. இதனால் பல ஆண்டுகளாக தங்கத்தின் விலைகள் வீழ்ச்சியடைந்தன
ஐரோப்பிய வரைபடத்தில், காடலான் அட்லஸில் (1375) தங்கக் கட்டியைப் பிடித்துக்கொண்டு மான்சா மூசா தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது கவனிக்கப்பட்டது. அவரது பயனம் மாலி மற்றும் ஆப்பிரிக்காவை இடைக்கால உலக வரைபடத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலைநிறுத்தியது.
ஒரு கலாச்சார மறுமலர்ச்சி
அவரின் வருகைக்கு பிறகு மசூதிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நகரங்கள் கட்டப்பட்டது. மேற்கு ஆப்பிரிக்காவிற்கு எரிந்த செங்கல் கட்டிடக்கலையை அறிமுகப்படுத்திய ஆண்டலூசிய கட்டிடக் கலைஞர் அபு இஷாக் அல்-சாஹிலி உட்பட இஸ்லாமிய உலகம் முழுவதிலுமிருந்து அறிஞர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களை அவர் பணியமர்த்தினார். திம்புக்டுவின் பெரிய மசூதி மற்றும் சங்கூர் பல்கலைக்கழகம் இஸ்லாமிய புலமையின் கலங்கரை விளக்கங்களாக மாறியது.
இராணுவ விரிவாக்கம்
யாத்திரை மேற்கொண்டிருந்தபோது, அவரது தளபதி சோங்காய் தலைநகரான காவோவைக் கைப்பற்றி, மாலியின் பிரதேசத்தை கணிசமாக விரிவுபடுத்தினார். சோங்காய் அரச குடும்பத்திலிருந்து பணயக்கைதிகளை பிடித்து மூசா கட்டுப்பாட்டைப் பெற்றார். மாலியை உலகின் மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றாக மாற்றினார்.
அரசாட்சியின் அடையாளம்
மான்சா மூசா கி.பி 1337 இல் மறைந்தார். ஆனால் அவரது செல்வாக்கு பல நூற்றாண்டுகளாக நீடித்தது. அவர் மேற்கு ஆப்பிரிக்காவை கற்றல், கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய நிர்வாக மையமாக நிறுவினார். சங்கூர் பல்கலைக்கழகம் சட்டம், வானியல் மற்றும் இறையியல் படிக்கும் ஆயிரக்கணக்கான அறிஞர்களை ஈர்த்தது.
மான்சா மூசா ஆப்பிரிக்க செல்வம், ஞானம் மற்றும் அரசாட்சியின் அடையாளமாகத் நினைவு கூறப்படுகிறார். ஆப்பிரிக்கா மனிதகுலத்தின் தொட்டில் மட்டுமல்ல, வலிமைமிக்க பேரரசுகளின் பிறப்பிடமாகவும் இருந்தது என்பதை நினைவூட்டுகிறது.
மான்சா மூசாவின் வரலாறு தங்கம் மற்றும் அதிகாரத்தைப் பற்றியது மட்டுமல்ல. உலகளாவிய கலாச்சார மற்றும் பொருளாதார வல்லரசாக மாற்றிய ஒரு தொலைநோக்கு பார்வையாளராகவும் மாலி அறியப்படுகிறார். அவரது வரலாறு, புலமை மற்றும் தொலைநோக்கு பார்வை இடைக்கால ஐரோப்பிய வரைபடங்களில் கூட நிலைத்திருக்கிறது.
Explore the story of Mansa Musa, the legendary emperor of Mali and the richest man in history. Learn about his wealth, Hajj, and powerful empire.