இந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் ஸ்ரீலீலா. அவரது திரையுலக பயணம் மற்றும் வலுவான நடனத் திறமைக்கு பெயர் பெற்ற காரணத்தால் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ரவி தேஜா, மகேஷ் பாபு, பவன் கல்யாண் மற்றும் பாலகிருஷ்ணா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளதும் அவரது பிற்பலத்த்துக்கு காரணம்.
பாக்ஸ் ஆபிஸில் ரூ. 366 கோடி
ஸ்ரீலீலா 2019 இல் கிஸ் மற்றும் பாரத்தே மூலம் அறிமுகமானார். இப்படங்களின் வாயிலாக மொத்தம் ரூ. 10 கோடி சம்பாதித்தார். அவரது முக்கிய வெற்றிகளில் தமாகா (ரூ. 63.83 கோடி), பகவந்த் கேசரி (ரூ. 84.78 கோடி), மற்றும் குண்டூர் காரம் (ரூ. 127.41 கோடி) ஆகியவை அடங்கும். இது இதுவரை அவரது நடிப்பில் வெளியான படங்களில் அதிக வசூலைப் பெற்றது.
ஆதிகேசவா, எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் மற்றும் ராபின்ஹுட் ஆகியவையும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், அவரது மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் தற்போது ரூ. 366.05 கோடியாக உள்ளது. இன்னும் பெரிய படங்கள் ஸ்ரீலீலா கைவரிசையில் உள்ள காரணத்தால், அவர் விரைவில் ரூ. 500 கோடி நடிகை கிளப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகர மதிப்பு மற்றும் சம்பள வளர்ச்சி
2025 ஆம் ஆண்டில் ஸ்ரீலீலாவின் நிகர மதிப்பு ரூ. 15 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் தனது சினிமா வாழ்க்கையை ஒரு படத்திற்கு ரூ. 4 லட்சம் வசூலித்து துவங்கினார். ஆனால் தற்போது ரூ. 1.5 கோடி முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். புஷ்பா 2 இல் ஒரு நடனப் பாடலுக்கு ரூ. 2 கோடி கூட பெற்றார்.
பாலிவுட்டில் விரிவடையும் பயணம்
தென்னிந்தியாவில் தனது வெற்றியுடன், கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக ஆஷிகி 3 மூலமாக பாலிவுட்டில் நுழையத் தயாராகி வருகிறார் நடிகை ஸ்ரீலீலா. கடின உழைப்பு மற்றும் தொழில்துறை மீதான அவரது அர்ப்பணிப்பு சினிமாவில் அனைத்து துறைகளிலும் உள்ள இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.
Sreeleela rapidly rises in Indian cinema with over ₹366 crore box office, a net worth of ₹15 crore, and a Bollywood debut opposite Kartik Aaryan in Aashiqui 3.