தெலுங்கு சினிமாவின் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் விஜய் தேவரகொண்டா ‘பெல்லி சூப்புலு’ (2016) படத்தின் வாயிலாக திரையுலகில் நுழைந்தார். அறிமுகமான முதல் படத்திலே ரசிகர்களை கவர்ந்தவர் விரைவிலே முன்னணி நடிகராக மாறிவிட்டார். அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் மற்றும் குஷி போன்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். இதன் மூலமாக திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்ற விஜய் தேவர்கொண்டா, பலத்தரப்பில் இருந்து பாராட்டுக்களையும் பெற்றார்.
2025 இல் நிகர மதிப்பு
2025 நிலவரப்படி, விஜய் தேவரகொண்டாவின் நிகர மதிப்பு ரூ. 50 கோடி முதல் ரூ. 70 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஒரு படத்திற்கு ரூ. 15 கோடிக்கு மேல் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தெலுங்குத் திரைப்படத் துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக கவனிக்க வைக்கிறார். திரைப்படத்துறையை தாண்டி, அவர் ஒரு பிராண்ட் ஒப்புதலுக்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமாகவும், இன்ஸ்டாகிராமில் ஒவ்வொரு விளம்பர பதிவுகளுக்கு சுமார் ரூ. 40 லட்சத்திற்கும் அதிகமாகவும் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. அவரது ஒட்டுமொத்த நிதி வலிமைக்கு பங்களிக்கும் வகையில் பல முதலீடுகளையும் விஜய் தேவரகொண்டா செய்துள்ளார்.
உயர் ரக கார் சேகரிப்பு
விஜய்யின் சொகுசு கார்கள் மீதான ஆர்வம் அவரது பல கோடி முதலீட்டை பிரதிபலிக்கிறது. அவற்றில் பின்வருவன அடங்கும்:
லெக்ஸஸ் MPV
BMW 5 சீரிஸ் 520d சொகுசு வரிசை
மெர்சிடிஸ் பென்ஸ் GLS 350
வோல்வோ XC90
ஆடி Q7
ஆடம்பரமான ஹைதராபாத் குடியிருப்பு
நடிகர் ஹைதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸில் அமைந்துள்ள ரூ. 15 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான வீட்டில் வசிக்கிறார். இந்த வீட்டில் அவர் தனது குடும்பத்தினருடனும், அவர்களின் செல்லப்பிராணியான சைபீரியன் ஹஸ்கி, ஸ்டோர்முடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
.
எதிர்கால திட்டங்கள்
விஜய் தேவரகொண்டா அடுத்து கௌதம் தின்னனுரி இயக்கத்தில் பாக்யஸ்ரீ போர்ஸுடன் இணைந்து ‘கிங்டம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் மே 30 அன்று வெளியாகவுள்ளது. பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு வரலாற்றுத் திட்டத்திலும், இயக்குனர் ராகுல் சங்க்ரித்யனுடன் இணைந்து ஒரு படத்திலும் பணியாற்றி வருகிறார்.
விஜய் தேவரகொண்டா இந்திய சினிமாவில் தொடர்ந்து வளர்ந்து வருகிறார். வணிக வெற்றியின் மூலமாக வளர்ந்து வரும் செல்வத்துடன், ஆடம்பரமான வாழ்க்கை முறையுடன் வாழ்ந்து வருகிறார்.
Telugu actor Vijay Deverakonda’s luxurious life including his ₹70 crore net worth and ₹15 crore house, following his success from ‘Arjun Reddy’ and other films.