சில வாரங்களில் நாட்டில் 5G சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், நுகர்வோருக்கு விலைகள் மலிவாக இருக்கும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
5ஜி சேவைகளை தடையின்றி வெளியிடுவதில் டெலிகாம் செயல்பாடுகள் மும்முரமாக இருக்கிறது என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
கதிசக்தி சஞ்சார் போர்ட்டலில் 5G வேலை உரிமை (RoW) விண்ணப்பப் படிவத்தை அறிமுகப்படுத்தியதோடு, “இந்திய டெலிகிராப் ரைட் ஆஃப் வே (திருத்தம்) விதிகள், 2022” ஐயும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
சிறிய செல்கள், மின் கம்பங்கள், ஸ்ட்ரீட் ஃபர்னிச்சர்ஸ் அணுகல் போன்றவை 5G நெட்வொர்க்குகளை எளிதாகவும் சுமுகமாகவும் பயன்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
5G சேவைகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் மற்றும் முதல் கட்டத்தில், 13 நகரங்களில் 5G இணைய சேவைகள் கிடைக்கும்.
Also Read Related To : India | 5G | Technology |
Affordable 5G service to be launched in India soon.