மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL), 10,000 டெலிகாம் டவர்களை விற்பனை செய்யும் பணியை தொடங்கியுள்ளது.
கோபுரங்களின் நிறுவன மதிப்பு சுமார் 4000 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் ஒப்பந்தத்தின் நிர்வாகத்திற்கான நிதி ஆலோசகராக KPMG தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 22 தொலைத்தொடர்பு வட்டங்களில் 20 வட்டங்களில் செயல்படும் BSNL, 68,000க்கும் மேற்பட்ட டவர்களை வைத்திருக்கிறது, அவற்றில் 70 சதவீதம் ஃபைபர் செய்யப்பட்டவை, 4G மற்றும் 5G சேவைகளை ஆதரிக்கும் திறன் கொண்டவை.
இவற்றில், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுடன் உள்கட்டமைப்பு பகிர்வு ஒப்பந்தம் செய்துள்ள பகுதிகளில் 13,567 டவர்களை 2025 ஆம் ஆண்டு வரை தவணைகளில் விற்பனை செய்ய பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.
மார்க்கெட்டில் ஆபரேட்டரின் நிலையை மேலும் வலுப்படுத்த, பிபிஎன்எல்-ஐ பிஎஸ்என்எல் உடன் இணைப்பதற்கு அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read Related To : BSNL | India | Technology |
BSNL to sell 10000 towers in bid to monetize its assets.