தமிழ்நாடு, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 4400 கோடி மதிப்பில் மெத்தனால் உற்பத்தி ஆலையை உருவாக்க NLC India ஈடுபட்டுள்ளது.
பழுப்பு நிலகரியிலிருந்து மெத்தனாலை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சியை NLC மேற்கொண்டது.
இந்த ஆய்வுக்கு நிறுவன இயக்குனர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 1200 டன் மெத்தனால் திரவமும், ஆண்டுக்கு 4 லட்சம் டன் உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை உருவாக்கும் பணியை NLC மேற்கொள்கிறது.
புதிதாக உருவாக்கப்படும் ஆலை வரும் 2027-ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கும்.
அதேபோல் இங்கு தயாரித்து விற்கப்படும் மெத்தனால் திரவதுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read Related To : NLC India | Methanol | Investment |
Rs 4400 Crore Methanol Production Plant at Neyveli.