விக்ரம் பட வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கமல் சொகுசு காரான Lexus-ஐ பரிசளித்திருந்தார்.
அது டொயோட்டா நிறுவனத்தின் Lexus ES300h எனும் சொகுசு செடான் கார்.
இது வேரியன்ட்ளான Exquisite மற்றும் Luxury இரண்டிலும் வருகிறது.
லெக்ஸஸ் கார்கள் அனைத்து முகப்பிலும் L எனும் லோகோ, ஒரு வித்தியாசமான புளூ ஷேடில் அழகாக மின்னுகிறது.
இதன் பேஸ் வேரியன்ட்டின் விலை சுமார் ரூ.68 லட்சம். உலக நாயகன் அளித்திருப்பது டாப் வேரியன்ட்டான ‘Luxury’ என தெரிகிறது. இதன் விலை சுமார் ரூ.75 லட்சம் ஆகும்.
லெக்ஸஸின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இதன் கட்டுமானமும், ஏரோடைனமிக் டிசைனும். GAK (Global Architecture-K) என்னும் உறுதியான கட்டுமானத்தில் தயாரான காராகும்.
இது ஒரு ஹைபிரிட் கார். பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் இரண்டிலும் ஓடக் கூடிய கார் ஆகும்.
எவ்வளவு ஈரமாக இருந்தாலும் வழுக்காமல் ஓடும் 19 இன்ச் டயர்கள் கொண்ட VSC (Vehicle Stability Control), வெயில் காலத்தில் முதுகில் வியர்க்காமல் இருக்கும் வென்டிலேட்டட் சீட்கள் என்று ஏகப்பட்ட வசதிகள் இதில் உண்டு.
Also Read Related To : Lexus | Kamal Hassan | Lokesh Kanagaraj |
Lexus given by Kamal to Lokesh as a gift of Vikram!